மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட பொங்கல் மற்றும் பட்டிப் பொங்கல் விழா எதிர்வரும் 17ஆம்திகதி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
மாவட்ட செயலக ஏற்பாட்டில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள இவ் விழாவில் திணைக்களத்தலைவர்கள் அதிகாரிகள் கலந்து கெர்ளவுள்ளனர் என மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
இதே நேரம், மாதாந்தம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் பௌரணமி கலைவிழா இம்மாதம் 15ஆம்திகதி மாலை மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம் மாத பௌர்ணமி கலைவிழாவில் முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்தின் நல்லதங்காள் வடமோடிக்கூத்து அரங்கேற்றப்படவுள்ளதாகவும் மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.
Published by
![130524162123_batticaloa_entrence_624x351_bbc_nocredit[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/05/130524162123_batticaloa_entrence_624x351_bbc_nocredit1.jpg?w=150&h=84)
Leave a comment