காத்தான்குடி ஊர் வீதியை புனருத்தாரணம் செய்வது தொடர்பாக அவ்வீதியில் வசிப்பவர்களிடம் காத்தான்குடி நகர சபையினால்வழங்கப்பட்ட அறிவித்தல் கடிதம்

urban (2)– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி ஊர் வீதியை புனருத்தாரணம் செய்வது தொடர்பாக நேற்று (07.01.2014) அவ்வீதியில் வசிப்பவர்களிடம் காத்தான்குடி நகர சபையினால் அறிவித்தல் கடிதம் விநியோகிக்கப்பட்டன..

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது பிரதேசத்தின் சகல வீதிகளும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு  வருவதை தாங்கள் அறிவீர்கள். ஆனால் காத்தான்குடியில் முதன் முதலாக பிரதான வீதியாக நிர்மாணிக்கப்பட்ட ஊர் வீதியானது ஆண்டுகள் பல கடந்தாலும் அனர்த்தங்கள் பல நிகழ்ந்தாலும் அழிவுற்று மிக மோசமான நிலையிலேயே இன்றுவரை காணப்படுகிறது.

ஊரின் முக்கியமான பாடசாலைகளும் பள்ளிவாயல்களும் இவ்வீதியில் அமைந்திருந்தும், பயனிக்கும் மாணவர்களும் பாதசாரிகளும் வாகனங்களும் இவ்வீதியின் ஒழுங்கின்மையால் பலவித சிரமங்களை எதிர்கொள்வது யாவரும் அறிந்த உண்மையாகும்.

2013ம் ஆண்டு ஐனவரி மாதம் மில்லத் மகளிர் மகா வித்தியாலயத்தில் இவ்வீதியின் புணர் நிர்மாணப்பணிகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயங்கள் மிகவும் தெளிவாக ஊர் வீதி வாழ் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பழைய கல்முனை வீதியை (ஊர் விதி) நவீன வீதியாக புணர்நிர்மாணம் செய்வதற்கு 160 மில்லியன் ருபாய்நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

பெப்ரவரி மாதம் 15ம் திகதியிலிருந்து இவ்வீதியை வடிகாலுடன் கூடிய அதிநவீன வீதியாக புனர்நிர்மாணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் இரு மருங்கிலும் உள்ள குடியிருப்பாளர்களை வீதியின் மத்தியில் இருந்து 5 மீட்டர் வரையில் அகலப்படுத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

எமது பிரதேசத்தில் ஏனைய பகுதிகளிலுள்ள வீதிகள் வடிகானுடன் கூடிய அதி நவீன வீதியாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள் பயன்பெறும் நிலையில் உள்ளது ஆனால் பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) மண்ணால் நிரம்பியும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டும் பயனிப்பதற்குக் கூட சிரமமான நிலையில் உள்ளது.

இதனைக் கவனத்திற்கொண்டு நாம் கேட்டுக்கொண்டவாறு பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் இவ்வீதியின் மத்தியிலிருந்து இரு பக்கமும் 5 மீட்டர் வரை அகலப்படுத்தித்தருமாறும் அவ்வாறு அகலப்படுத்துவதற்கு இடையூறாகவுள்ள மதில்கள்,வேலிகளை அகற்றித்தந்து இவ்வீதியின் புனர்நிர்மாணப்பணிகளுக்கு ஒத்துழைப்பும் பங்களிப்பும் வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.   ;

Published by

Leave a comment