காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் அக்கரைப்பற்றில் கல்விப் பணி செய்கின்ற ‘பைத்துல் ஹிக்மா’ நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றினை அக்கரைப்பற்று ஆயிஸா பாலிகா மகாவித்தியாலயத்தில் நடாத்தியது.
இக் கலந்துரையாடலின் போது, மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச்; செல்கின்றனர் என்ற விடயமும், அவர்கள் கல்விப் பணியில் ஈடுபடுகின்ற போது முகங்கொடுக்கின்ற சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.
2012ம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றிலுள்ள பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊரின் கல்விமான்களின் ஆலோசனையின்படி ‘பைத்துல் ஹிக்மா’ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. க.பொ.த.(உ/த) கணித, விஞ்ஞான துறைகளில் கல்வி கற்கும் மாணவர்களை மையப்படுத்தியே இந்நிறுவனம் தறபோது செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் மிகவும் பிரபல்யமான விரிவுரையாளர்களைக் கொண்டு பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தியும், மாணவர்களுக்கு முன்மாதிரிப் பரீட்சைகள், மற்றும் பரீட்சையோடு தொடர்புடைய அனைத்து செயற்திட்டங்களையும் செய்து வருகின்றனர். பாடசாலைகளுக்குச் சென்று தொடர்ந்து கல்வி கற்று வருகின்ற மாணவர்களே இந்நிறுவனத்தின் பிரத்தியோக வகுப்புக்களுக்கு சமுகமளிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் அனைத்து மாணவர்களையும் வரவழைக்கின்றனர். இந்நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் வெளி இடங்களில் பிரத்தியோக வகுப்பிற்காகச் செல்வதில்லை. மாணவர்களின் ஒத்துழைப்புக்கள் மற்றும் முன்மாதிரிப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் பற்றி மாதாந்தம் பெற்றோர்களுடன் கலந்துரையாடி மேலும் கற்றலை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
எதிர்காலத்தில் பைத்துல் ஹிக்மாவின் செயற்பாடுகளில் காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர்களுடனும் இணைந்து எமது சமுகத்திற்கான கல்வி எழுச்சியினை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
Published by



Leave a comment