யாழில் பிரமாண்டமான நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா!

motorbike_motorcycle_Jaffna[1]யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரமாண்டமான முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் பங்குபற்றுதலோடு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் வியாழக்கிழமையன்று (09.01.2014) சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.

158 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதி முற்பகல் 9.00 மணிக்கும் 175 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதி முற்பகல் 11.30 மணிக்கும் 127 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஊர்காவற்றுறை நீதிமன்றத் தொகுதி பிற்பகல் 2.30 மணிக்கும் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வுகளில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா உட்பட நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், அதிதிகளும் பங்குபற்றுவர். 

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

Published by

Leave a comment