Category: Your Kattankudy
-
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் அலிசப்றி தாக்கப்பட்டார்
– விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் அலி சப்றி இன்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லுாரி தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காத்தான்குடி ஜம் இய்யத்துல்உலமா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:ஹிறா பவுண்டேஸன் ஏற்பாட்டினில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லுாரி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் (01.02.2014 சனிக்கிழமை) இன்று காத்தான்குடி ஜம் இய்யத்துல்உலமா கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் MLA.முஹம்மது ஹிஸ்புழ்ழாஹ் MA MP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் MF.முகம்மது சிப்லி Eng ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
-
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல்
டுபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச்சேர்ந்த சகோதரர்களிடையே எம் ஊர் உறவுகளை அறிமுகம் செய்து, அதன் மூலம் நம் சகோதரர்கள் தமக்குள் ஒரு அறிமுகத்தை ஏட்படித்திக் கொள்வதற்காகவும், அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக உறவை வளர்த்துக் கொள்வதற்காகவும்
-
ஜும்ஆ பயான் – நூராணியா ஜும்ஆப் பள்ளிவாயல்
ஒலிப்பதிவு – slyouth.com இடம் – நூராணியா ஜும்ஆப் பள்ளிவாயல் காத்தான்குடி (31/01/2014) உரை நிகழ்த்தியவர் – அஷ்ஷெய்க் முஸம்மில் (ஹாஷிமி)
-
இன்று முதல் தென் சூடானுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்
கொழும்பு: வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையரை தென் சூடானு க்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிக்கிறது.
-
பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கு 374 கோடி ரூபாய்களை அள்ளி வழங்கிய ஐ.சி.சி.
– S-90 கராச்சி: கடந்த எட்டு ஆண்டுகளில் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் வழியாக கிடைத்த வசூலிலிருந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கான பங்குத் தொகையாக இந்திய ரூபாய் மதிப்பில் 374 கோடியே 13 லட்சம் பணத்தை ஐசிசி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கொடுத்துள்ளது.
-
‘எமது நாட்டின் மின்தட்டுப்பாட்டுக்கு சீனாவே காரணம்’
– S-90 கொழும்பு: இலங்கையில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் சீனா அமைத்துள்ள மின் உற்பத்தி நிலையம் அடிக்கடி பழுதடைந்து விடுவதுதான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார் எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
-
PMGGயின் தலைமையிலான கூட்டணியின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு உறுதி
– PMGG ஊடகப் பிரிவு கொழும்பு: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் இணைப்புச் செயலாளர் தெரிவித்தார்.
-
மனித உயிர்களுக்கு ஆபத்தினை விளைவிக்கும் டெங்கு நுளம்பு பெருக்கத்தினை தடுப்போம். சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் காத்தான்குடி
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:பருவமழையத் தொடர்ந்து காத்தான்குடியின் பல பகுதிகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசாருடன் இனைந்து மேற் கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு பரிசொதனையின் போது அனேகமான வீடுகளின் கிணருகளிலும், நீர் தோங்கிய சிறு பாத்திரங்களிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள்அதிகமாக் காணப்பட்டதினை அறிய முடிகின்றது.
-
‘சேவைகள் தானாக வருமென்று நம்பாமல் அவற்றை நாம் சென்றுதான் பெற்றுக் கொள்ள வேண்டும்’ ஈச்சந்தீவு மக்கள் சந்திப்பில் நகரபிதா ஹில்மி
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலக நகரசபைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஈச்சந்தீவு, ஆலங்கேணி பகுதிகளில் கிண்ணியா பிரதேச செயலாளர் எஸ். கிரிஸ்நேந்திரன் தலைமையில் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதாக இடம்பெற்றது.
-
உலகில் படிப்பறிவற்ற மக்கள் அதிகம் வாழும் நாடு எது தெரியுமா?
– SHM டெல்லி: லட்சக்கணக்கில் குழந்தைகளும், வயது வந்தோரும் இன்னும் படிப்பறிவின்றி இருக்கும் தற்போதைய சூழலில், 2015 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் கல்வி என்ற தனது இலக்கிலிருந்து இவ்வுலகம் நழுவக்கூடிய சாத்தியத்தை படைசாற்றுவது போல் இருப்பதாக யுனைட்டெட் நேஷன்ஸ் (யுஎன்) அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
-
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய கட்டுக்கப்பல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரை பிரதேசத்தில் 31-01-2014 இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 30 அடிக்கு மேல் நீளமான பாரிய மூங்கில் படகொன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.