‘எமது நாட்டின் மின்தட்டுப்பாட்டுக்கு சீனாவே காரணம்’

minister_Pavithra_vanniarachi15[1]– S-90

கொழும்பு: இலங்கையில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் சீனா அமைத்துள்ள மின் உற்பத்தி நிலையம் அடிக்கடி பழுதடைந்து விடுவதுதான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்  எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

இலங்கையில் சீன நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 300 மெகாவட் அனல் மின் உற்பத்தி நிலையம் அடிக்கடி பழுது ஏற்பட்டு செயல்படாமல் நின்று விடுகிறது. இதன் காரணமாக, மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஒரே மின் நிலையமான அது, குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மூன்றே ஆண்டுகளில் அது பழுதடைந்து நின்று விட்டது. இதுபோன்ற தோல்விகள் சீனாவின் பெயரைக் கெடுத்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்

உலகிலேயே மிக அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படும் நாடாக இலங்கை விளங்குகிறது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Published by

Leave a comment