Category: Your Kattankudy
-
நாட்டைக்காட்டிக் கொடுக்கும் துரோகத்தை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஒருபோதும் மேற்கொள்ளாது! 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் பிர்தௌஸ் நளீமி
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக, வெளிநாட்டுச் சக்திகளின் அடிவருடி இயக்கமாக, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் இயக்கமாக இன்று சிலர் சித்தரித்து வருகின்றனர். எவர் எவ்வாறு எம்மைப்பற்றி விமர்சித்த போதிலும் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தை ஒருபோதும் எமது இயக்கம் மேற்கொள்ளாது என்பதனை இந்த 66வது சுதந்திர தின நிகழ்வில் நாம் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி இந்த நாட்டிற்குப் பிரகடனம் செய்து வைக்கின்றோம்’
-
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை ‘பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் இலங்கையைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்!’ எனும் தொனிப்பொருளில் PMGG கொண்டாடியது
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடியிலுள்ள அதன் தலைமையாக மக்கள் அரங்கில் காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சூறாசபை உறுப்பினருமான AGM. ஹாறூன் இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
-
நாட்டை உண்மையான சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே – சுதந்திர தின உரையில் கிண்ணியா நகரபிதா ஹில்மி தெரிவிப்பு!
ரைஸ் கிண்ணியா: யுத்த பயமும், இருள் சூழ்ந்ததுமாக இருந்த இலங்கை திருநாட்டில் இன்று நாம் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெரும் போராட்டத்தின் மத்தியில் பெற்றுத் தந்த சுதந்திரத்தினால் தான். இன்று நாட்டை உண்மையான சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே என நகரசபை முன்றலில் நடைபெற்ற
-
முசலி மஹா வித்தியாலய முதலாவது இல்ல விளையாடடுப் போட்டி
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் மாவட்டத்தின் முசலி மஹா வித்தியாலயம் தேசிய கல்லுாரியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து இடம் பெற்ற முதலாவது இல்ல விளையாடடுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பரிசு வழங்குவதையும், வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான், அமைச்சரின் மாவட்ட
-
யுவர்காத்தான்குடி இணையத்தளத்திற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் வாழ்த்து
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: போட்டித்தன்மை நிறைந்த இந்த ஊடக கலாசாரத்தினை கொண்ட இக்காலத்தில் சமூக உணர்வுடனும், பொறுப்புடனும் செய்திகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்து வாசகர் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுக்கொண்ட யுவர்காத்தான்குடி இணையத்தளத்திற்கு இரண்டு வயது பூர்த்தியாவதையிட்டு தாம் மகிழ்ச்சி கொள்வதாகும், காத்திரமான செய்திகளை சமூக ஒற்றுமையின் நோக்கம் கருதி மேலும் வெளி்க கொண்டுவரவும் தமது வாழ்த்துக்களை
-
‘குருவிகூட தனது கூட்டில் மகிச்சியாக வாழும் சுதந்திரம் வேண்டும்’ : சுதந்திரதின நிகழ்வில் ஜனாதிபதி
– MJ கேகாலை: இன்று கேகாலை நகரில் இடம்பெற்ற இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வில் ‘இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் சமமானவர்கள், அனைத்து மக்களினரது உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும்’ என இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்தி மான்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது சுதந்திரதின உரையில் குறிப்பிட்டார்.
-
காத்தான்குடி பிரதான வீதியில் கட்டப்படும் தேசியக் கொடிகள்…
காத்தான்குடி: இன்று (04-02-2014) இலங்கை 66வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருக்கின்றன.
-
இன, மதப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும் – முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன்
இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம், சிங்கள-முஸ்லிம், தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
-
புல்மோட்டை மீனவர்களின் வேண்டுகோள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் புல்மோட்டை: கொக்கிளாய் கடல் ஏரியில் மீன்பிடித்தலில் ஈடுபடும் ஏனைய பிரதேச மீனவர்களின் சட்டவிரோத முறைகளையும் தடை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமானால், தாமும் சட்டபூர்வமான மீன்பிடி நடவடிக்கைகளில் மட்டுமே
-
மொஸ்கோ பாடசாலையில் மாணவனின் துப்பாக்கிச்சூடு: ஆசிரியர், பொலிஸ் அதிகாரி பலி!
– SHM மொஸ்கோ: ரஷியா தலைநகர் மொஸ்கோவில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மாணவர் ஆசிரியர் மற்றும் பொலீஸ் அதிகாரியையும் சுட்டுக் கொன்றுவிட்டு 20 மாணவர்களை பிணைக் கைதியாக்கினான்.
-
கனவரின் நடத்தையில் சந்தேகம்: தானமாக வழங்கிய சிறுநீரகத்தை திருப்பிக் கேட்ட மனைவி
– S-90 லண்டன்: தன் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த லண்டன் மனைவி ஒருவர் ஆத்திரத்தில் அவருக்குத் தான் தானமாக வழங்கிய சிறுநீரகத்தைத் திருப்பித் தரும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.