-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:பருவமழையத் தொடர்ந்து காத்தான்குடியின் பல பகுதிகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிசாருடன் இனைந்து மேற் கொண்ட டெங்கு கட்டுப்பாட்டு பரிசொதனையின் போது அனேகமான வீடுகளின் கிணருகளிலும், நீர் தோங்கிய சிறு பாத்திரங்களிலும் டெங்கு நுளம்புக் குடம்பிகள்அதிகமாக் காணப்பட்டதினை அறிய முடிகின்றது.எனவே எமது பிரதேசத்தில் கட்டுப்பாட்டிலுள்ள டெங்கு நோய் மேலும் பரவுவதனை தடுக்கும் முகமாக கிணறுகளுக்கு நுளம்பு குடம்பிகளை உண்ணக்கூடிய (Guppy fish) மீன்களை இடுமாறும் நீா் தேங்கக் கூடிய பாத்திரங்களை அகற்றி தொடர்ச்சியாக பேணுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எதிர் வரும் காலங்களில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான காரணிகளோ..நுளம்பு குடம்பிகளோ இனங்காணப்படுமிடத்து அவ்வளவினுல் வசிப்பவர்கள்,மற்றும் உரிமையாளர்கள் மீதும் மேலும் வெற்று வளவுகளினுள் குப்பைகளை போடும் நபர்களுக்கு எதிராகவும் மிகக் கடுமையான சட்ட சடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி Dr.UL.Naseerdeen தெரிவித்தார்.
Leave a comment