கிண்ணியா: கிண்ணியா பிரதேச செயலக நகரசபைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளிலுமுள்ள வேலைத்திட்டங்களை அடையாளப்படுத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஈச்சந்தீவு, ஆலங்கேணி பகுதிகளில் கிண்ணியா பிரதேச செயலாளர் எஸ். கிரிஸ்நேந்திரன் தலைமையில் கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதாக இடம்பெற்றது.
2014 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்ச்சி நிரலில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பிரயோசமான முறையில் செலவு செய்யும் நோக்குடன் அபிவிருத்தி செய்யப்படவேண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை சந்தித்து அவர்கள் மூலமாக கேட்டறிந்து செயற்படுத்தும் நோக்குடனும் அப்பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் ஒதுக்கப்படும் நிதிகளை பயனுள்ளதாக அமைப்பதற்காகவும் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின்போது கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் உரையாற்றுகையில் ‘ஆலங்கேணி, ஈச்சந்தீவு பகுதிகளில் அநேகமான அபிவிருத்தி தேவைகள் இருக்கின்ற போது அவற்றை இவ்வாரான சந்தர்ப்பங்களில்தான் அடையாளப்படுத்தி அவற்றை செய்வதற்கு முன்னுரிமைப்படுத்த முடியும். இங்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘சேவைகள் தானாக வருமென்று நம்பாமல் அவற்றை நாம் சென்றுதான் பெற்றுக் கொள்ள வேண்டும்’ அப்போதுதான் நமது பிரதேசங்களின் அபிவிருத்தியை வென்றெடுக்க முடியும். நகரசபைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளும் அழகாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நானும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றேன். என நகரபிதா தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் எஸ். குpரிஸ்நேந்திரன், உதவிச் பிரதேச செயலாளர், எஸ்.டி.ஓ, மக்களென பலர் கலந்து கொண்டனர்.
Published by
![d.s.o_3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/d-s-o_31.jpg?w=150&h=112)
![d.s.o_3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/d-s-o_31.jpg?w=640&h=480)
![d.s.o_5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/01/d-s-o_51.jpg?w=640&h=480)
Leave a comment