Category: Your Kattankudy
-
‘கடத்தப்பட்ட 200 பள்ளி மாணவிகளின் இருப்பிடம் எனக்குத் தெரியும்’:போர்னோ கவர்னர் அறிவிப்பு
– S-90 லண்டன்: தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட மாணவிகள் தற்போது இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என போர்னோ மாநில கவர்னர் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் சுமார் 200க்கும் அதிகமான பள்ளி மாணவிகள் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
-
லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி
– S-90 திரிபோலி: லிபியாவில் படகு கவிழ்ந்து மூழ்கியதில் 40 பேர் பலியாகினர்.ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சேர்ந்த மக்கள் படகு மூலம் ஐரோப்பா கிளம்பினர். அவர்கள் லிபியா கடல் பகுதி வழியாக செல்கையில் திரிபோலியின் கிழக்கு பகுதியில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 40 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
நைஜீரியா ‘கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும்’ புதிய வீடியோ
அபூஜா: நைஜீரியாவில் நூற்றுக்கு மதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போக்கோ ஹராம் வெளியிட்டுள்ளது.
-
ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து NFGG ஆராய்வு
– PMGG ஊடகப் பிரிவு பதுளை: நடைபெறவிருக்கும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பான கருத்துக்களையும் நிலைமைகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு கடந்த 7, 8ம் திகதிகளில் பதுளை மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை மேற்கொண்டது.
-
‘வன்னி மாவட்டத்தில் வெளி மாவட்ட மக்களை குடியேற்ற இடமளிக்கமாட்டோம்’-ஹுனைஸ் பாரூக் எம்.பி.
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: கடந்த வெள்ளிக் கிழமை திகதி பாராளுமன்றத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதற்கு இக்குழுவின் தலைவர், மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதித் தலைவர், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயளாலர், அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
-
தஸ்லீமா நஸ் ரீனுக்கு மார்பில் கட்டிகள்!
– MJ நியூயோர்க்: முன்னாள் பங்களாதேஷ் எழுத்தாளரும், இஸ்லாமிய விரோதியுமான தஸ்லீமா நஸ் ரீன் கடந்த வாரம் இந்தியா சென்றிருந்தவர், உடனடியாக நியூயோரக் திரும்பி இருந்தார். கோடைகால விடுமுறைக்கு இந்தியா சென்றிருந்த தஸ்லீமா நஸ்ரீன், தனது நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் ஓர் நோய் காரணமாக நியூயோர்க் மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
இலங்கையர் ஒருவர் வருடாந்தம் 95 கிலோ அரிசியை நுகர்கின்றார்
கொழும்பு: இலங்கை அரிசி உற்பத்தியில் உயர் இரகமான மற்றும் முழுமையான குணவலுக்களைக் கொண்டதாக இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் வருடாந்தம் ஒரு தனி நபர் 95 கிலோ கிராமை நுகர்வதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலிருந்து வெளியாகியுள்ளது என்று பத்தலகொட நெல் ஆராய்ச்சிப் பணியக பிரதி இயக்குனர் டி.எம்.சிரிசேன தெரிவித்தார்.
-
துபாய் எமிரேட்ஸ் சாலை கோர விபத்தில் 15 பேர் பலி
– S-90 துபாய்: துபாயில் நடந்த சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 15 பேர் பலியாகியுள்ளனர். பலியான இந்தியர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மெர்ஸ் நோய் ஒட்டகங்களினால் பரவலாம்: சவூதி எச்சரிக்கை
றியாத்: சவூதி அரேபியாவில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ள மெர்ஸ் என்ற நோய்க் கிருமிக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற விதமாக அந்நாட்டின் அரசாங்கம் வலுவான எச்சரிக்கையை தற்சமயம் விடுத்துள்ளது.
-
‘எந்தத் தேர்தலை முதலில் வைப்பது?’ -அரசாங்கத்திற்குள் குழப்பம்!
கொழும்பு: உரிய காலத்திற்கு முன்னர், பொதுத் தேர்தலையோ ஜனாதிபதித் தேர்தலையோ நடத்தாது, அதனை ஒத்திவைக்க வேண்டும் என அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்களிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
போதை…! நாம் போகக் கூடாத பாதை
– மதியன்பன் கஞ்சாவை அபினை உதடு காதலித் திடுதல் தீதே… நெஞ்சாற இதை யறிந்தும் நித்தமும் அதனுள் வீழ்ந்து நஞ்சினை உடம்பில் ஏற்றி நாசமாய்ப் போகின்றாயே… அஞ்சினேன் கண்டு – போதை அணிகலன் வேண்டாம் தோழா!
-
காத்தான்குடி அல்-மனாரில் இரு பெரும் விழாக்கள்
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி அப்துல் ஐவாத் மண்டப திறப்பு விழாவும் அப்துள்ளா (றஹ்மானி) ஹசரத் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் எதிர்வரும் 12.05.2014 திங்கட் கிழமை கடற்கரை வீதியிலுள்ள அல் மனார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.