கொழும்பு: உரிய காலத்திற்கு முன்னர், பொதுத் தேர்தலையோ ஜனாதிபதித் தேர்தலையோ நடத்தாது, அதனை ஒத்திவைக்க வேண்டும் என அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்களிடம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முதலில் பொதுத் தேர்தலை நடத்தி விட்டு அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தலாம் என சிலரும், முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்திய பின்னர், அடுத்து பொதுத் தேர்தலை நடத்தலாம் என மேலும் சிலரும் யோசனை முன்வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 15 நாடாளுமன்ற ஆசனங்கள் குறையும் எனவும் இதனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி விட்டு பின்னர் பொதுத் தேர்தலை நடத்தினால் 10 ஆசனங்களே குறையும் என அரசியல் ஆய்வாளர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பெற முடியாது போகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலாகத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருந்ததுடன், திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்து வரும் சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவது அரசாங்கத்திற்கு பாதிப்பாக அமையும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முதலில் மேற்குலக நாடுகளிடம் இருந்து வரும் தடைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையவுள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் இரண்டாம் தவணை பதவிக்காலமும் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடையவுள்ளது.
இந்த நிலையில், எந்த விதத்திலாவது இந்த இரண்டு தேர்தல்களையும் முன்கூட்டியே நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.tw
Published by
![ELECTION-non-colour[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/election-non-colour1.jpg?w=150&h=141)
Leave a comment