Category: Your Kattankudy
-
கர்ப்பிணி முஜிபாவை வாகனத்தால் மோதி மரணத்தை ஏற்படுத்தியவர் பொலிஸில் சரண்
கொழும்பு: கொழும்பு குணசிங்கபுர மஞ்சள் கோட்டில் கர்ப்பிணி பெண் முஜிபாவை வாகனத்தால் மோதி கொலை செய்த நபர் நேற்று (09) புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
-
குவைத்தில் ஹலால் மாநாடு; பிரதியமைச்சர் காதர் பயணம்
கொழும்பு: குவைத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறும் ஹலால் தொழில்துறையும் அது தொடர்பான சேவைகளும் குறித்த மூன்றாவது மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் பங்குபற்றுகிறார்.
-
பொலிஸாருக்கு பாராட்டு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொலிஸ் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சேவையில் குற்றங்களை ஒழித்து திறமையான சேவை புரிந்த 60 பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவையுணர்வுகளைப் பாராட்டி வெகுமதிகள் மற்றும் பணப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 09-05-2014 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
-
9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திச் சபையினால் அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் 9 ஏ சித்திபெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு
-
பீபா-2014 உலகக் கிண்ணமும், நிறைவடையாத மைதானங்களும்
– MJ பிரேசிலியா: உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் ஒரே ஒரு மாதமே இருக்கும் நிலையில், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளை நடாத்தும் பிரேசிலில் மைதான வேலைகள் நிறைவுபெறாததால், பீபா தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றது.
-
மாயமான மலேசிய விமானமும் சி.என்.என் இன் கருத்துக் கணிப்பும்!
நியுயோர்க்: மாயமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கக்கூடும் என்று சிஎன்என் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது.
-
டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனியின் 27வது கிளை மட்டக்களப்பில் திறப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: டி.டி.எப்.சி. தேஷோதய டெவ்லொப்மென்ட் பினான்ஸ் கம்பனி லிமிடட்டின் 27வது கிளை மட்டக்களப்பில் இல 132,திருகோணமலை வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 09-05-2014 வெள்ளிக்கிழமை இன்று திறந்து வைக்கப்பட்டள்ளது.
-
காத்தான்குடியில் இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்
காத்தான்குடி: காத்தான்குடியில் 09-05-2014 இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தின் தொலைநகல் பிரதி இங்கு பதிவேற்றப்படுகிறது. துண்டுப்பிரசுரத்தைப் பெரிதாகப் பார்ப்பதற்கு உரிய படத்தின் மேல் ‘கிளிக்’ செய்க.
-
‘இலங்கையில் தொலைபேசி உரையாடல்கள் ஒற்றுக்கேட்கப்படுகின்றன’ அஸாட் சாலி
கொழும்பு: ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள விசேட பிரிவால் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 800 பேரினது தொலைபேசிகள் ஒற்றுகேட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி குற்றம்சாட்டியிருக்கின்றார்.
-
முப்படைகளோடு சேர்த்து குரங்குகள் படையையும் உருவாக்கியது சீனா
– SHM பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.கேள்விப்பட்டிருப்பீங்க.. ‘குரங்குகள்படை’யை கேள்விப்பட்டிருக்கீங்களா? சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம்.