Category: Your Kattankudy
-
தங்காலையில் 58 ஏக்கரில் நவீன சிறைச்சாலை
கொழும்பு: தங்கால அகுனுகொலபெலஸ்ஸவில் 4996 மில்லியன் ரூபா செலவில் புதிய சிறைச்சாலையொன்றை நிர்மாணிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. 58 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறைச்சாலை நிர்மாணிப்பதற்காக நாளை மறுதினம் (16) அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
-
புகைத்தலிலிருந்து மக்களை விடுவிக்கும் பணிகள் தொடரும்
கொழும்பு: சிகரெட் பெட்டியில் புகையிலை பாதிப்பு தொடர்பான படங்களை பிரசுரிப்பது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாம் மதிக்கிறோம். ஆனால் பாராளு மன்றத்தினால் 80 வீதம் படங்களை பிரசுரிக்க அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் 50 முதல் 60 வீத பகுதியிலே பாதிப்பு படங்களை பிரசுரிக்க முடியும் என வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தொடர்பில் திருப்தி அடைய முடியாது என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
-
குத்பா தமிழ் மொழிபெயர்ப்பு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் டோஹா: அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
-
‘அர்ஷின் நிழலில்’ என்ற தலைப்பில் கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 15-05-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
‘கிழக்கில் சிறுகைத்தொழில் கிராமங்கள் அமைக்கப்படும்’: மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் பனைசார் உற்பத்திப் பொருட்கள் அதிக வளர்ச்சி கண்டு வரும் நிலையில் பிரம்பு, பன், கைத்தறி, மட்பாண்டம் மற்றும் தெங்குசார்ந்த கைப்பணி பொருட்களின் உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் தனது அமைச்சின் கீழ் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் கைப்பணிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
-
போதுமான தூக்கமின்மை புற்றுநோயை தோற்றுவிக்கலாம்
லண்டன்: தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள்.
-
மொபைல் சார்ஜர் தீப்பற்றியதால் ஒரு குடும்பமே கருகிய பரிதாபம்!
லண்டன்: இங்கிலாந்தில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்ததில் ஒரு குடும்பமே தீக்கிரையாகியுள்ளது. இங்கிலாந்தின் யோர்க்ஷயர், செப்ஃபீல்ட் நகரில் உள்ள வீட்டில் கைப்பேசி சார்ஜர் தீ பிடித்து எரிந்துள்ளது. இதில், 9 வார குழந்தை உட்பட 5 பேர் உயரிழந்தனர்.
-
ஐரோப்பாவுக்கு சட்டவிரோதப் பயணம்: இத்தாலியில் கப்பல் மூழ்கி 17 பேர் பலி: 200 பேர் மாயம்!
– SHM ரோம்: இத்தாலியில் சிறு கப்பல் ஒன்று மூழ்கியதில் 17 பேர் பலியாகி உள்ளதாகவும், 200 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் அகதிகளாக இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று லம்பெடுசா தீவுக்கு சென்றது.
-
மாயமான மலேசிய விமானத்தை தேடுவதற்கு செலவிட்ட பணம் 90 மில்லியன் டொலர்!
– S-90 சிட்னி: மலேசிய விமானத்தின் விபத்து யாராலும் மறக்க முடியாத ஒன்று இச்சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இந்த விமானத்தை தேடுவதற்காக அவுஸ்திரேலியா மட்டும் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர் செலவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரவித்துள்ளது.
-
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி காத்தான்குடியில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள 25 பல்கலைக்கழக கல்லூரிகளில் அரச மற்றும் தனியார் துறையின் இணைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள முதலாவது பல்கலைக்கழக கல்லூரியான மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி 13-02-2014 இன்று செவ்வாய்க்கிழமை இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளருமான டலஸ் அழகப்பெருமவினால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
-
ஆண்களின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் சவர்க்காரங்களும், பற்பசைகளும்…
– S-90 லண்டன்: அன்றாடம் உபயோகப்படுத்தும் சவர்க்காரம், கிரீம் வகைகள் மற்றும் பற்பசைககளில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது.’இந்த சவர்க்காரம் போட்டு குளிங்க… பெண்களின் மனம் கவரலாம்’, ‘இந்த பற்பசை பாவிங்க … பெண்கள் உங்களின் அருகில் வருவார்கள்… உங்களுக்கு ‘ஐ லவ் யூ’ சொல்வார்கள் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பொருட்களை வாங்க வைக்கின்றனர்.
-
மட்டு விகாரைக்கு வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் – மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் அன்பளிப்பு!
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சிங்கள முஸ்லிம் மதத்தவர்களிடையே இன நல்லுறவை பேணும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பினால் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஒரு தொகுதி பணம் மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.