கொழும்பு: கடந்த வெள்ளிக் கிழமை திகதி பாராளுமன்றத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதற்கு இக்குழுவின் தலைவர், மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், பிரதித் தலைவர், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயளாலர், அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக்:-
வன்னி மாவட்டத்தின் பழைய அகதிகளின் மீள்குயேற்றமானது மிகவும் மந்த கெதியில் நடைபெறுவதாகவும், முசலி போன்ற பிரதேசங்களில் மீள்குடியேறுகின்றவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப் படவில்லையெனவும் சபையில் கூறினார். அத்துடன் தான் அப்பிரதேசங்களிற்கு விஜயம் செய்த போது அங்குள்ள மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஒரு லீட்டர் தண்ணீருக்கு ரூபா 1ரூபா50சதம் செழுத்திப் பெறுவதாகவும், இவர்களுக்கு நீர் வசதியையும், ஏனைய அடிப்படை வசதிகளையும் பெற்றுக் கொள்வதற்கு உடனடியாக பணம் ஒதுக்கித்தருமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் முசலிப் பிரதேசத்தில் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாகவும் கூறிய பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தான் அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் அங்கு மீள்குடியேறுபவர்கள் 1990ம் ஆண்டு அதாவது இடம் பெயர்வுக்கு முன்னர் குறித்த அப்பிரதேசத்தில் வசித்திருக்க வேண்டும். அல்லது அவர்களின் பெற்றோரோ, பெற்றோர்களின் பெற்றோரோ வசித்திருக்க வேண்டும். மேலும் இடம் பெயர்ந்து உள்நாட்டில் வசித்த பிரதேசத்தில் வசித்த பதிவை இரத்துச் செய்து அப்பிரதேச செயளாலரிடம் இருந்து அல்லது பொறுப்பு வாய்ந்த அதிகாரியிடம் இருந்து அதற்கான ஆவணங்களைப் பெற்று சமர்பிக்கப் படும் பட்சத்தில் மாத்திரம் தான் மிள்குடியேறுகின்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளப் படவேண்டும் என்று தீர்மானம் எடுக்கப் பட்டிருப்பதாகவும், அதன்படியே கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப் பட்டதாகவும்; தெரிவித்ததோடு, யுத்த காலத்தில் இதே போன்று சிங்கள சகோதரர்களும் மீளக்குடியேறும் போது இதே நிபந்தனைகளைப் பயன் படுத்த வேண்டும் என்றும் இதனை மீள்குடியேற்ற அமைச்சு கண்கானிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொண்டார்.
இதேவேiள அப்பிரதேச மக்கள் அண்;மைக் காலமாக அங்குள்ள படையினரின் செயற்பாடுகள் அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்களை மேற் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெறுவதாக அச்சம் தெரிவித்திருப்பதாகவும் இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்து மூலமாக தான் தெரிவித்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.
அந்தப்பிரதேசத்தில் வாழுகின்ற முஸ்லிம், தமிழ் மக்கள் தான் உற்பட ஆழும், எதிர் கட்சி உறுப்பினர்கள் சிங்கள சகோதரர்கள் மீள்குடியேறுவதை ஆதரிக்கின்ற அதேவேலை ஏற்கனவே கூறப்பட்ட பிரதேச அபிவித்திக் குழுவில் எடுக்கப் பட்ட திர்மானத்திற்கு அமைவாக அந்தப் பிரதேசத்திற்குச் சொந்தமாகக் கொண்டவர்கள் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பலாத்காரமாகக் குடியேற்றுவதற்கு எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியதோடு இதைக் கண்கானிக்கும் பொறுப்பு மீள்குடியேற்ற அமைச்சிற்கு இருக்கின்றது என்றும் அவ்வாறு திட்டமிட்டு வெளிமாவட்டங்களில் இருந்து சிங்களக் குடியேற்றம் வன்னி மாவட்டத்தில் இடம் பெற்றால் இதற்கான முழுப் பொறுப்பையும் மீள்குடியேற்ற அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இக்கூற்றை ஏற்றுக் கொண்டதோடு யுத்தத்திற்கு முன்னர் அந்தந்தப் பிரதேசங்களில் வசித்தவர்களைத் தான் அவர்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முறைப்படி அந்தந்தப் பிரதேசங்களிலே குடியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு தான் உரிய நடவடிக்கையை மேற் கொள்வதாகவும் அமைச்சரும் செயளாலரும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் மேலும் கூறினார்.
Published by

Leave a comment