காத்தான்குடி அல்-மனாரில் இரு பெரும் விழாக்கள்

almanar– எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி அப்துல் ஐவாத் மண்டப திறப்பு விழாவும் அப்துள்ளா (றஹ்மானி) ஹசரத் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழாவும் எதிர்வரும் 12.05.2014 திங்கட் கிழமை கடற்கரை வீதியிலுள்ள அல் மனார் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடியின் கல்வி கலாச்சார மற்றும் சமூக துறைகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் முன்னாள் காத்தான்குடி நகர பிதாவுமாகிய சட்டத்தரணி ஏ.எல் அப்துல் ஐவாத் LLB மற்றும் அரை நுற்றாண்டுக்கு மேல் காத்தான்குடியின் மார்க்க விடயங்களில் சேவையாற்றியவரும் ஜாமியத்துல் பலாஹ் அரபிக்கல்லூரியின் அதிபருமாகிய ஷெய்குல் பலாஹ் எம்.ஏ அப்துள்ளா றஹ்மானி அவர்களை கௌரவிக்கும் முகமாகவும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்ஹ் ஏ எல் எம் மும்தாஸ் மதனி தெரிவித்தார். 

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல் ஏ எம் ஹிஸ்புள்ளா கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Published by

Leave a comment