நியூயோர்க்: முன்னாள் பங்களாதேஷ் எழுத்தாளரும், இஸ்லாமிய விரோதியுமான தஸ்லீமா நஸ் ரீன் கடந்த வாரம் இந்தியா சென்றிருந்தவர், உடனடியாக நியூயோரக் திரும்பி இருந்தார். கோடைகால விடுமுறைக்கு இந்தியா சென்றிருந்த தஸ்லீமா நஸ்ரீன், தனது நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் ஓர் நோய் காரணமாக நியூயோர்க் மருத்தவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
வேகமாகப் பரவக்கூடிய ஓர் வகையான கட்டிகள் , தஸ்லீமாவின் மார்புப் பகுதியில் காணப்படுவதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
தஸ்லீமா நஸ்ரினின் தாய் புற்றுநோய் காரணமாக மரணித்தார். தற்பொழுது தஸ்லீமாவின் சகோதரனும் புற்றுநோய் காரணமாக நியூயோர்க் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் இந்நிலையில், தனக்கும் புற்றுநோய் இருக்கலாம் என்பதை தஸ்லீமா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
‘ நாளை நானும் மரணிக்கலாம். ஒரு வேளை நான் மரணித்தால் எனது பூனையை நீங்கள் பராமரிக்கவும். இப்பூனை உலகத்தில் சிறந்த (பெண்) பூனை’ என்பதாக டிவிட் செய்திருந்தார்.
தஸ்லீமா நஸ் ரீன்
ஆனால், தஸ்லீமா நஸ்ரினுக்கு புற்றுநோய் இருப்பதாக இதுவரைக்கும் வைத்தியர்கள் நிரூபிக்கவில்லை.
51 வயதையுடைய தஸ்லீமா நஸ்ரின் பங்களாதேஷில் பிறந்தவர். பங்களாதேஷ், ‘மைமென்சின்ங்’ வைத்தியக் கல்லூரியில் 1986 இல், எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ‘லஜ்ஜா’ (வெட்கம்) எனும் நாவலை இஸ்லாத்திற்கு எதிராக 1987 ஒக்டோபர் மாதம் வெளியிட்டார்.
இப்புத்தக வெளியீட்டின் பின்னர் தனது சொந்த நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் இருந்து எழுந்த முஸ்லிம்களின் கண்டனங்களையடுத்து, மேற்குலகுக்கு தப்பிச் சென்றார்.
இதுவரைக்கும் தஸ்லீமா நஸ்ரீன், இந்தியா உட்பட மேற்கத்தேய நாடுகளில் இடம் மாறி வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Leave a comment