கஞ்சாவை அபினை உதடு
காதலித் திடுதல் தீதே…
நெஞ்சாற இதை யறிந்தும்
நித்தமும் அதனுள் வீழ்ந்து
நஞ்சினை உடம்பில் ஏற்றி
நாசமாய்ப் போகின்றாயே…
அஞ்சினேன் கண்டு – போதை
அணிகலன் வேண்டாம் தோழா!
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
பீடியை சிகரட் தன்னை
பிரியமாய் ஊதித் தள்ளி
தேடினாய் நோயை – இனியும்
தீயுடன் விளையாடாதே…
நாடியே தளர்ந்து உடலம்
நலிந்ததைக் கண்டு நாளும்
அடியே போனேன் அன்பா
ஆகையால் போதை வேண்டாம்
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
படிப் படி யாகத் தூளை
பாவித்து வந்தால் நீயும்
பொடிப் பொடியாகி ஓர் நாள்
பொசுங்கியே போவாய் – கண்ணீர்
வடித்திடும் குடும்பம் தன்னை
வாழ்விலே நூறு கண்டேன்
துடிக்கிறேன் உன்னைக் கண்டு
தோழனே போதை வேண்டாம்
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
லேகியம் என்ற சாத்தான்
லேசிலே போக மாட்டான்
வேகியே உடம்பு நூலாய்
வெந்திடும், நடக்கும் பிணமாய்
ஆகியே போவாய் நாளும்
ஆடியே நடந்து செல்வாய்
நோகுதே நெஞ்சம் தோழா!
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
நோய் தரும் போதை வேண்டாம்.
மதுவெனும் சாராயத்தை
மாந்தியே நாளும் ஊர்க்குப்
புதினமே காட்டுகின்றாய்
புழுவெனத் தாழ்ந்து போனாய்
மதுவினைத் தொட்ட தாலே
மதியினை இழந்து விட்டாய்
இதுபெரும் தீது தோழா!
இன்னுமா போதை – வேண்டாம்
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
மழையது பெய்தால் கூட
மதுக்கடை ஓரம் நிற்றல்
பிழையெனச் சொல்வேன் – போதை
பேய்களை விரட்டி வாழ்வாய்
களைகளை விட்டு வைத்தால்
காணியில் அறுவடைக்கு
பிழையது வருமே – போதைப்
பழக்க மெல்லாமே வீண்தான்
◾(̅_̅_̅_̅(̅_̅_̅_̅_̅_̅_̅_̅_̅̅_̅()ڪے
போதையின் தீதையெல்லாம்
போதனை செய்தேன் பாவில்
ஆதலால் கேட்போ ரெல்லாம்
அடுத்தவர் காதில் இதனை
உதிட வேண்டும் – இந்த
உலகமே உணர வேண்டும் .


Leave a comment