கொழும்பு: இலங்கை அரிசி உற்பத்தியில் உயர் இரகமான மற்றும் முழுமையான குணவலுக்களைக் கொண்டதாக இருப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் வருடாந்தம் ஒரு தனி நபர் 95 கிலோ கிராமை நுகர்வதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலிருந்து வெளியாகியுள்ளது என்று பத்தலகொட நெல் ஆராய்ச்சிப் பணியக பிரதி இயக்குனர் டி.எம்.சிரிசேன தெரிவித்தார்.
மேற்படி நுகர்வுக்கு ஈடுகொடுக்குமளவுக்கு இலங்கையின் நெல் உற்பத்தி 2.86 மெட்ரிக் தொன் மில்லியன் அலகு ஒன்றுக்கு 3.8 டொன் சராசரி உற்பத்தியாகிறது. இதன்படி இலங்கையில் அரிசி உற்பத்தி அதிகரிப்பைக் காட்டுவதாகவும் 2013ம் ஆண்டில் 116 கிலோ நுகர்வைக் கொண்டிருந் ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் 4.16 மில்லியன் தொன் நெல் உற்பத்தியை (அறுவடை) ஹெக்டயார் ஒன்றிற்கு 4.3 மி.தொன் நெல்லை உற்பத்தி செய்துள்ளது என்றும் விவசாயத் திணைக்களம் நெல் உற்பத்தியை உயர் தொழில் நுட்ப குணவலுக் கூடியதாக நேர்த்தியுடன் செய்து வருகிறது என்பதனைச் சுட்டிக் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Published by

Leave a comment