துபாய்: ஈரானில் 5.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து துபாயில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள க்வெஷம் தீவின் தென்மேற்கில் 66 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் துபாயின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மக்கள் சமூக வலைதளங்களில் நில அதிர்வு குறித்து தெரிவித்துள்ளனர்.கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதனால் துபாயில் பரபரப்பு ஏற்பட்டது.
துபாய் ஷெய்ஹ் செய்யட் வீதியில் மக்கள் பதட்டத்துடன்
Leave a comment