மட்டு-மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராக ஊடகவியலாளர் பாரிஸ் தெரிவு
– பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராக மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1991.06.20ல் பிறந்த இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பயிற்றுவிக்கப்பட்ட இளம் ஊடகவியலாளர்களில் ஒருவர் மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயலாளராகவும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர்கழங்களின் சம்மேளன அமைப்பாளராகவும், கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் மற்றும் கோறளைப்பற்று மேற்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நதா சமூக சேவைகள் அமைப்பின் செயலாளராகவும்,கடமையாற்றி வருகின்றார்.
இனங்களுக்கிடையிலான சமூக நல்லிணக்கம் மற்றும் அதற்கான வகிபாகத்தில் இளைஞர்,யுவதிகளுடைய பங்களிப்பினை உறுதி செய்து மற்றும் அதற்கான பல்வேறு செயற் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் மேற்கொண்டுவரும் சிறந்த துடிப்பு மிக்க இளைஞர் ஆவார்.
சிறு வயதிலேயே பல தரப்பட்ட சமூகத்தவர்களின் அன்பினையும் ஆதரவினையும் சிறந்த அறிமுகத்தினையும் பெற்ற இவர் சமூக மேம்பாட்டிற்காக உழைக்கும் பெரும் பெரும் சமூக நல அமைப்புக்களில் சமூக அணி திரட்டாளராகவும்,இணைப்பாளராவும் கடமையாற்றியுள்ளார்.
கல்குடா பிரதேசத்தின் கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் எல்லை பகுதியில் நீன்ட கால பிரச்சினையாக காணப்பட்டு வந்த திண்மக்கழிவு அகற்றும் முறைமைக்கான செயற் திட்டத்தினை யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் உதவியுடன் பல லட்சக் கணக்காண ரூபாய் செலவில் தயாரித்து வழங்க மிகப்பிரதான மாணவராகவும் அத்திட்ட இணைப்பாளராகவும் கடமையாற்றிய பெருமை அவரை சாரும் இத் திட்டத்தின் ஊடாக குப்பைகளை அகற்றி அவற்றினை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து சூழலினை பாதுகாக்க இத்திட்டம் முழுமையாக உதவி இருந்தாலும் தமிழ் முஸ்லிம் ஆகிய இரு சமூகத்தவர்களின் உள்ளத்தில் இருந்த குப்பைகளை அகற்றி கருத்து ரீதியாக முரண்பாடுகளை கொண்டிருத்தவர்கள் மத்தியில் அஹிம்சை வழி தொடர்பாடலை இரு சமூகத்தவ்ர மத்தியில் ஊக்குவித்து இன நல்லுறவினை கட்டியெழுப்ப உறுதுணையாக நின்று உழைத்தவராவார்.
எம்.ரீ.எம்.பாரிஸ்
இளம் வயதாக இருத்தாலும் சிறந்த பேச்சாற்றலூடையவரும் மூவிணத்தவர்களுடன் சிறப்பாக பழக கூடியவரும் செயற்திறன் மிக்கவராகவும் காணப்படுகின்றார்.
எவ்விடயத்தை எடுத்தாலும் எச் சவால்களுக்கு முகம் கொடுத்து அதனை அஹிம்சை வழியில் முறியடித்து தீர்வு காண முயற்சிக்கும் இளைஞர்களில் இவரும் ஒருவர் தேசத்தின் மீது அக்கரையினையும் விசுவாசத்தையும் கொண்டவராக காணப்படும் இவர் மாவட்டத்தின் தாயகத்தின் அபிவிருத்தியில் என்றும் பங்களிப்பு செய்து வருபவராவார்.
சிறந்த புகைப்படம் பிடிப்பாளரும் கதையாக்கம் மற்றும் ஆவணப்படம்,குறுந்திரைப்படம் ஆகியவைகளை சிறந்த முறையில் படம்பிடிக்கும் ஆற்றலை கொண்ட அவர் அதற்கான பயிற்சியினை முறையாக பெற்றுள்ளார்.
அது மட்டு மல்லாது மட்டு மாவட்டத்தின் எழுச்சிக்கும் தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யும் 50 வளவாளர்களை உருவாக்கும் விஷேட செயற் திட்டத்தில் இணைந்;து வளவாளர்களுக்கான பயிற்சி நெறியினையும் முறையாக பூர்த்தி செய்துள்ள இவர். ஊடகத் துறையில் அதித ஆர்வத்தையும் ,இளைஞர்களின் உள்ளத்துணர்வுகளை அறிந்து அவர்களின் சுய விருப்பு வெறுப்புகளுக்கமைவாக அவர்களின் திறன் மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்காக உழைத்து வரும் இவரின் பணிகள் மென்;மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்;டி வாழ்த்துவோமாக
Leave a comment