இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வருகிறார்

mahinda modi– S-90

டெல்லி: இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். விரைவில் அவர் இலங்கை செல்லவுள்ளதாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாலர் சுஜாதா சிங் கூறியுள்ளார்.

இன்று ராஜபக்ச உள்ளிட் சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுஜாதா சிங் பேசுகையில்,

சார்க் தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்தை பயனுள்ளதாக இருந்தது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடனான பேச்சுவார்த்தையில் தீவிரவாதம் குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என நவாஸிடம் மோடி வலியுறுத்தினார். இந்தியாவுடனான உறவுவையும், வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்த நவாஸ் உறுதி கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தையின் போது தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. 13-வது அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்சவிடம் மோடி வலியுறுத்தினார். அதிகார பகிர்வுக்கு 13-வது அரசியல் சட்டம் அமலாவது அவசியம் என்றும் விளக்கிக் கூறினார்.அனைத்து துறைகளிலும் இலங்கையுடன் ஒத்துழைப்பு தொடரும் என உறுதி கூறினார். இதையடுத்து இலங்கைக்கு வரவேண்டும் என்று ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்று மோடி இலங்கைக்கு வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளார் என்றார் சிங்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மோடியின் பதவிப் பிரமானத்துக்குச் சென்றதிலிருந்து இன்றுவரைக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பல அரசியல்வாதிகள் மூக்குடைபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

mahinda modi

 

Published by

Leave a comment