Category: Your Kattankudy
-
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி வயோதிபர் பலி: வடமுனையில் சம்பவம்
– ஏறாவூர் அபூ பயாஸ் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட இகிரான் பிரதேச செயலகபிரிவுக்குள் உள்ள வெலிகந்த பிரதேசத்துக்கு அருகாமையிலுள்ள வடமுனை பிரதேசத்தில் வசித்து வரும், வதனக்குட்டி சின்னப்பிள்ளை கங்காணம் (வயது -64) என்பவர் நேற்று மாலை கட்டிட இடிபாடுகளுக்குள் சடலமாக கிடப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.
-
திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியில்முதலாவது பட்டமளிப்பு விழா
ஏத்தாளை: திகழி அல் முஹம்மதியா அரபுக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா ஜூன் முதலாம் திகதி மாலை 2:30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவிருக்கின்றது.
-
10வது தடவையாக ஐரோப்பாவின் சம்பியனானது ரியல் மட்ரிட்
– MJ லிஸ்பன்: போர்துக்கள், லிஸ்பன் மைதானத்தில் அடிதடிக்கும், அதிரடிக்குமிடையில் மிகச் சிறப்பாக சற்று முன்னர் இடம்பெற்று நிறைவடைந்த ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் நாட்டின் ரியல் மெட்ரிட் அணி, 4:1 எனும் கோல் அடிப்படையில் அபார வெற்றிபெற்று 10வது தடவையாக ஐரோப்பாவின் சம்பியனானது.
-
ஒரே நேரத்தில் 20 பல்லை பிடுங்க வைத்தியர் முயன்றதால் நோயாளி மரணம்
– S-90 நியூயோர்க்: நோயாளி ஒருவருக்கு 20 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்க முயன்றதால் குறித்த பெண் உயிரிழந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த இந்திய பல் டாக்டர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பல் டாக்டர் ரஸ்மி பட்டேல், அமெரிக்காவின் என்பீல்ட், ரொடிங்டன் ஆகிய இரு நகரங்களில் கிளினிக் நடத்தி வருகிறார்.
-
21 வயது பல்கலைக்கழக மாணவி கொலை
எல்பிட்டிய: 21 வயதான பல்கலைக்கழக கலைப்பீட மாணவி ஒருவர் எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நியாகம, தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த இந்த யுவதி கொழும்பு திரும்புவதற்காக இன்று காலை மூன்று மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
-
ஏறாவூர்-சவுக்கடி கடலில் பிடிபட்ட இராட்சத திருக்கை
ஏறாவூர்: சவுக்கடி கடலிலிருந்து சுமார் 1000 கிலோ கிராம் நிறையுடைய இராட்சத கொம்புத்திருக்கை மீன் ஒன்று இன்று சனிக்கிழமை பிடிபட்டுள்ளது. இந்த இராட்சத திருக்கை, சண்முகம் வடிவேல் என்ற மீனவரின் வலையில் சிக்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
-
தீவிரவாதிகளின் எச்சரிக்கைகளையும் மீறி நவாஸ் ஷெரீப்பின் இந்திய பயணம்
– SHM லாஹூர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பயணம் மேற்கொள்வதற்கு ஜாமாத் உத் தவா, லஷ்கர், தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளன.டெல்லியில் 26-ந் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
-
ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி இன்று
– MJ லிஸ்பன்: 2013-2014ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கழகங்களின் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி இன்று 24-05-2014 இரவு 7:45 (இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:15) மணிக்கு, போர்த்துக்கள் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரத்தின் ‘ஸ்டேடியோ டா லுஸ்’ மைதானத்தில் கோலாகளமாக இடம்பெறுகின்றது.
-
‘பதின்ம வயது’ மாணவர்களுக்கு ஓர் அபாயச்சங்கு
கொழும்பு: நாட்டினதும் ஒரு சமூகத்தினதும். வளர்ச்சி மாணவ சமூகத்திலேயே தங்கியிருக்கிறது. அண்மையில், ஊட கங்களில் வெளிவந்த சில செய்திகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, ‘மாணவர்களை டொலர்களுக்கு பணயம் வைக்க ஒருபோதும் இட மளிக்க முடியாது’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி மஹிந்த நாளை புதுடில்லி பயணம் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு
கொழும்பு: இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை 25 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி புது டில்லியில் நடை பெறவுள்ளது.
-
மஹிந்த அழைப்பை நிராகரித்தார் விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்: இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில், இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று கலந்துகொள்ள முடியாதிருப்பதாகவும், அதற்காக வருந்துவதாகவும் வடமாகாண முதலமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
-
ஒருகாலத்தில் வீசா கொடுக்க மறுத்த அமெரிக்கா தற்பொழுது மோடிக்கு வலிந்து வலிந்து அழைப்பு
– S-90 வாஷிங்டன்: மோடியை முறைத்துக் கொண்டது, விசா கொடுக்க மறுத்தது எல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்போது மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா. மோடியோ அமெரிக்காவை பெரிதாக கண்டு கொள்ளாமல் திராட்டில் விட ஆரம்பித்திருக்கிறார்.