கராச்சி: இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான வசிம் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி என்றால் அந்தப் போட்டிக்கு தனிப்பட்ட வரவேற்பு உள்ளது. ஆனால் மும்பை தாக்குதலுக்கு பிறகு இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே போட்டிகள் அவசியம் வேண்டும் என வலியுறுத்திய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மேலும் கூறுகையில், ‘அரசியல் காரணங்களுக்காகஇ இந்தியாஇ பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடத்தப்படாதது வருத்தம் அளிக்கிறது’.
‘மேலும் நான் எப்போதும் விளையாட்டையும், அரசியலையும் ஒன்றாக பார்க்க மாட்டேன். இவ்விரு அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் விரைவில் நடத்தப்படும் என நம்புகிறேன்’.
‘அதுமட்டுமல்லாது ஐ.பி.எல் தொடரில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில், ஒவ்வொரு அணிகளும் பலம் பெறும்’.
‘இது தவிர, பாகிஸ்தானிலும் ஐ.பி.எல்., போட்டி பிரபலமடையும். எனவே அடுத்து வரும் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Published by
![25Wasim[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/25wasim1.jpg?w=150&h=96)
![india-v-pakistan-semi-final-mohali[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/india-v-pakistan-semi-final-mohali1.jpg?w=473&h=390)
Leave a comment