ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு 

nazeer msm– ஏறாவூர் அபூபயாஸ்

ஏறாவூர்: நேற்று கிண்ணியாவில் நடந்த மாகாண மட்ட கிரிகெட் போட்டியில் ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற மாகாண மட்ட போட்டி நிகழ்வுகளில் எல்லேயில் இரண்டாமிடமும் , எறி பந்தில் இரண்டாமிடமும் பெற்றதோடு இபத்தொன்பது வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான கரம் சுற்றுப்போட்டியில் முதலாமிடத்தையும் பெற்று ஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

eravur rahumaniya

மேற்கூறப்பட்ட நான்கு குழுநிலை போட்டிகளிலும் வெற்றி பெற்ற இப்பாடசாலை அணியினர் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியிருப்பதோடு, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கு குழு நிலை போட்டிகளில் அதிகூடிய புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களுக்கு தொடர்ந்தேர்ச்சியான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களான ஜனாப் UL. நபியுதீன்,  ஜனாப் AGM.ரியாஸ் ஆகியோருக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். என்பதாக தேசிய காங்கிரஸின் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

Published by

Leave a comment