கராச்சி விமான நிலையம் தாக்கப்பட்டது!

karachi (2)– MJ

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையம் சற்றுமுன்னர் ஆயுதம் தாங்கிய நபர்களால் கனரக ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டது. அடையாளம் தெரியாதவர்களால் இத்தாக்குதல் இன்றிரவு சற்று முன்னர்இடம்பெற்றது.

இத்தாக்குதலைத் தொடர்ந்து இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் விமானநிலையத்தைச் சூழ பலத்த தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலையடுத்து, குறித்த விமான நிலையத்துக்கான விமான சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருப்பதுடன், தரையிரங்கும் விமானங்கள், வேறு விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாக்குதல்களில் விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என 14 பேர் காயப்பட்டிருப்பதாகவும், சில சடலங்களை காணமுடிந்ததாகவும், கராச்சி சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிகத் தகவல்களை தற்போதைக்குப் பெற முடியாமலிருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

karachi

karachi (2)

Published by

Leave a comment