மஞ்சள் ஏன் உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்?

turmeric– SHM

மஞ்சள் (Turmeric) ஒரு இயற்கை நிவாரணியாகும். நம் தோல்களில் ஏற்படும் சிறு காயங்கள் முதல் பல வெட்டுக் காயங்கள் வரை ஆற்ற வல்லது இந்த மஞ்சள். இலங்கை இந்திய உணவுவகைகளான கறி மற்றும் சாம்பார் பதார்த்தங்களில் இந்த மஞ்சல் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.பெண்கள் தங்களின் மேனியைப் பொலிவாக வைத்திருக்க மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். சாதாரண காயங்களை ஆற்றுவதிலிருந்து புற்றுநோயைக் குணப்படுத்துவது வரை பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது. இப்படி மஞ்சளின் மகிமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்

இந்த மஞ்சளை நாம் உணவில் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் ஆரோக்கியத்துக்கு அது நல்லது

நம் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமான கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் மஞ்சள் முக்கியப் பங்கை வகிக்கிறது.

கணையப் புற்றுநோயிலிருந்து லூக்கேமியா என்னும் இரத்தப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் வரை பல மருத்துவச் சிகிச்சைகளுக்கு மஞ்சள் பயன்படுகிறது. புற்றுநோயைத் தூண்டிவிடும் புதிய இரத்த அணுக்களின் வளர்ச்சியை அது கட்டுப்படுத்துகிறது.

நுரையீரல் சிறப்பாகச் செயல்பட இயற்கையிலேயே மஞ்சள் உதவுகிறது. நுரையீரலுக்குத் தேவையில்லாமல் வரும் நச்சுப் பொருட்களை மஞ்சள் கட்டுப்படுத்துகிறது. நினைவாற்றலைக் குறைக்கச் செய்யும் அல்சைமர் நோயின் தாக்கத்தை மஞ்சள் வெகுவாகக் குறைக்கிறது.

மஞ்சள் ஒரு இயற்கையான வலி நிவாரணி ஆகும். பல்வேறு வாத நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக மஞ்சள் விளங்குகிறது.

பல அலர்ஜிகளுக்கு எதிராகப் போராடும் மஞ்சள், நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது.

இரத்தம் உறைதலை வெகுவாகக் குறைக்கும் மஞ்சள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்துகிறது.

உடல் செரிமானத்திற்கு மஞ்சள் ஒரு அருமையான மருந்தாகும்.

எனவே மஞ்சளை நம் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

turmeric

 

 

Published by

Leave a comment