கராச்சி விமானநிலைய தாக்குதல்: தீவிரவாதிகள் உட்பட பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு!

army– MJ

கராச்சி: கராச்சி சர்வதேச விமான நிலையம் நேற்றிரவு தீவிரவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களுக்குள் உள்ளானது. இத்தாக்குதலில் கனரக ஆயுதங்கள் மற்றும் ரொக்கட்கள் பயன்படுத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

அல்கய்தா அமைப்பின் உஸ்பேகிஸ்தான் பிரிவு இத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என பாகிஸ்தான் சந்தேகம் தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தான் இராணுவத்தினருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் தீவிரவாதிகள் பின்வாங்கிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலையடுத்து, பெருந்தொகையான ஆயுதங்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு 11 மணியளவில் 10 தீவிரவாதிகள் விமானநிலையத்திற்குள் புகுந்து இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. உயிரழந்தவர்களுள் தாக்குதலில் ஈடுபட்ட 10 தலிபான் தீவிரவாதிகளும் உள்ளடங்குவர்.

army

weapons

Published by

Leave a comment