Category: Your Kattankudy
-
கோடை காலத்தை முன்னிட்டு ஜித்தா எரிபொருள் நிலையங்கள் வழங்கும் இலவச அன்பளிப்பு!
– MJ ஜித்தா: தற்பொழுது நிலவும் கோடைகால வெப்பத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் போத்தல்களும், ‘டிஸ்யூ’ பெட்டிகளும் (Tissue Box) வழங்கப்படுகின்றன.
-
போக்கோ ஹராமை ஒடுக்க ‘இலங்கை இராணுவத்தின் உத்தி’
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவம் கையாண்ட போர் உத்திகளை, நைஜீரியாவில் போக்கோ ஹராம் இஸ்லாமிய ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்காக தாமும் ஆராய்ந்து வருவதாக நைஜீரிய பாதுகாப்பு அமைச்சு கூறுகின்றது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ் மீது அமெரிக்கா எந்நேரத்திலும் வான்தாக்குதல் நடத்தலாம்
– OIT நியுயோர்க்: ஈராக்கிற்கு நிபந்தனையுடன் கூடிய உதவி செய்ய தயார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் சதாம் ஆதரவு ஐ.எஸ்.ஐ.எஸ் படை மீது வான்வழி தாக்குதலை எப்போது வேண்டுமானாலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
ஹரமைன் அதிவேகப் புகையிரதம் 6 மாதத்துக்குள் புறப்படும்!
– MJ மதீனா: பல பில்லியன் றியால்களை அள்ளிவீசி, பாரியளவில் அமைக்கப்பட்டுவரும் மக்கா, ஜித்தா, ராபிக், மதீனா ஆகிய 4 நகரங்களை இணைக்கும் ஹரமைன் அதிவேகப் புகையிரத சேவைக்கான வேலைத் திட்டங்கள் பாரியளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.
-
கிரீன் வீச் பாடசாலையின் முதலாவது வருட தேர்ச்சியும், பொருட்காட்சியும்
– ரைஸ் கிண்ணியா: கிரீன் வீச் சர்வதேச பாடசாலையின் முதலாவது வருடத் தேர்ச்சியும் பொருட்காட்சியும் இன்று 14.06.2014 கிரீன் வீச் பாடசாலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.
-
உலகச் சம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி!
– MJ ரியோ: உலகக் கிண்ணத் தொடரின் பி பிரிவுக்கான முதலாவது போட்டி நேற்றிரவு பிரேசிலின் எரினா ஃபொண்டி நோவா மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் உலகச் சம்பியனும், ஐரோப்பாவின் சம்பியனுமான ஸ்பெய்ன், நெதர்லாந்திடம் 5:1 கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.
-
ஆறு கோடி ரூபா தங்கம் கடத்திய இருவர் கைது
கொழும்பு: சட்டவிரோதமாக இலங்கைக்குள் தங்கம் கடத்தி வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முற்பகல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்திலேயே இவர் வந்ததாக தெரிய வந்துள்ளது.
-
சவுதியில் கட்டுமானப் பணியாளர்களுக்கு ரமழானில் வேலை நேரம் 3 மணித்தியாலங்களே!
– MJ ஜித்தா: எதிர்வரும் ரமழானில் கட்டுமானப் பணியாளர்களுக்கு 3 மணித்தியாலங்களே வேலை நேரங்களாக அமையும் என ஜித்தா சம்பர் ஓஃப் கொமர்ஸ் (Chamber of Commerce) நிறுவனத்தின் தவிசாளர்அப்துல்லாஹ் ரவ்தான் அறிவித்துள்ளார்.
-
2013 ம் ஆண்டு GCE (O/L) பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியைத் தொடரும் தகுதியான மாணவர்களுக்கு உதவும் புலமைப்பரிசில் திட்டம் – 2014/2015
– ஆயிஷா பௌண்டேஸன் காத்தான்குடி: மேற்குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்காக தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தை நிரப்புகையில் தெளிவான தகவல்களை வழங்கவும். தகவல்கள் தெளிவற்றதாயின் நிராகரிக்கப்படும்.
-
‘உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளில் தீர்வுகளை காண முடியாது’- அமைச்சர் ஹக்கீம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சரியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவதன் ஊடாகவே இனப் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணலாம். பல்வேறு விதமான தீர்வுத் திட்டங்கள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
இன்றைய ஜூம்ஆ உரை
உரை நிகழ்த்தியவர்- அஷ்-ஷெய்க் முஸ்தகீம் (பலாஹி) தலைப்பு – ரமழான் மாதத்திற்கு தயாராகுவோம் இடம் – பதுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய காத்தன்குடி காலம் – 13.06.2014