ஜித்தா: எதிர்வரும் ரமழானில் கட்டுமானப் பணியாளர்களுக்கு 3 மணித்தியாலங்களே வேலை நேரங்களாக அமையும் என ஜித்தா சம்பர் ஓஃப் கொமர்ஸ் (Chamber of Commerce) நிறுவனத்தின் தவிசாளர்அப்துல்லாஹ் ரவ்தான் அறிவித்துள்ளார்.
வெளிவேலைக் கட்டுமானப் பணியாளர்களுக்கு ரமழான் காலங்களில் ஆகக்கூடியது 4 மணித்தியாலங்களே ஒரு நாளைக்கு வேலை செய்ய முடியும் என்பது சவுதி அரேபியாவின் தொழில் சட்டங்களில் ஒன்றாகும். இம்முறை ரமழான் அதிகூடிய வெப்ப நிலை காலத்தில் வருவதாலும், 15 மணித்தியாலங்கள் வரைக்கும் நோன்பை நோற்கவேண்டி வரும் என்பதாலும், ஜித்தா-சம்பர் ஓஃப் கொமர்ஸ் அமைப்பின் தவிசாளர் இவ்வறிவிப்பை விடுத்தார்.
கட்டிடப் பணியாளர்கள் காலை 8மணி முதல் காலை 11 மணிவரைக்குமே வேலை செய்ய வேண்டும். இதன் பின்னர் நண்பகல் தாண்டிய பின்னரே ஒரு மணித்தியாலம் வேலை செய்ய முடியும். இதுபற்றி கட்டடுமான ஒப்பந்தக் காரர்கள் மற்றும் குறித்த நிறுவனத்தினர் தொழிலாளர் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தொழிலாளர்களை நிர்ப்பந்தித்து வேலைக்கமர்த்தினால், இச்சட்டத்தை மீறும் நிறுவனங்கள் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆனால், குறிப்பிட்ட காலத்துக்குள் எங்களால் ஒப்படைக்கப்பட இருக்கும் கட்டப் பணிகள் இச்சட்டத்தினால் பிற்போடப்படும் என நிறுவனங்கள் மேற்படி அமைப்பினர்களிடம் தங்களது அதிருப்திகளைத் தெரிவித்திருந்தனர்.
எனினும், தொழிலாளர்களின் நலன்களை புனித ரமழானில் பேணுமாறும், அவர்களுக்கு காலை 8 மணியிலிருந்து காலை 11 மணிவரைக்குமே வேலை செய்வதற்கு அனுமதிக்குமாறும் சம்பர் ஓஃப் கொமர்ஸ் நிறுவனத்தின் தவிசாளர் அப்துல்லாஹ் குறித்த நிறுவனங்களைக் கேட்டிருக்கின்றார்.
அதி வெப்ப காலங்களில் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை மதிய நேரத்தில் பணிக்கு அமர்த்தினால், சவுதி அரேபியான் தொழிலாளர் சட்டம் 236 இன்படி, 10,000 சவுதி ரியால்கள் தண்டப்பணமாக நிறுவனங்களிடம் அறவிடப்படும்.
இதனால் சில நிறுவனங்கள் ரமழானில் தங்களது பணிகளை மேட்கொள்ள முடியாமல் பின்வாங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment