ஹரமைன் அதிவேகப் புகையிரதம் 6 மாதத்துக்குள் புறப்படும்!

saudi– MJ

மதீனா: பல பில்லியன் றியால்களை அள்ளிவீசி, பாரியளவில் அமைக்கப்பட்டுவரும் மக்கா, ஜித்தா, ராபிக், மதீனா ஆகிய 4  நகரங்களை இணைக்கும் ஹரமைன் அதிவேகப் புகையிரத சேவைக்கான வேலைத் திட்டங்கள் பாரியளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது மதீனாவிலிருந்து அமைக்கப்பட்டு வரும் ஹரமைன் புகையிரதத் திட்டம், மன்னர் அப்துல்லாஹ்வின் வர்த்தக நகரமான ராபிக் வரை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் 6 மாதத்துக்குள் மதீனாவிலிருந்து ராபிக் நகரம்வரை ஹரமைன் புகையிர சேவை வெள்ளோட்டமாக விடப்படும் என சவுதி அரேபியாவின் புகையிர அமைப்பின் (SRO) தலைவர் ஹாலித் அல் சுவைகட் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘அதிநவீன பாரியளவான இவ் வேலைத் திட்டத்தில், மக்காவில் 50 வீதமும், மதீனாவில் 70 வீதமும், ராபிக் நகரில் 57 வீதமும் மற்றம் ஜித்தாவில் 50 வீதமும் நிறைவடைந்திருக்கின்றன’.

‘ஹரமைனின் ஒவ்வொரு ரயில் நிலையங்களும், சர்வதேச தரத்திற்கமைய அமைக்கப்படும். இந்தவகையில், சிறு விமானங்கள் தரையிறக்கப்படும் விமான நிலையங்கள், பாரியளவான வர்த்தக நிலையத் தொகுதி, தொழுகை வசதிகள், வி.ஐ.பியினருக்கான விசேட வசதிகள், வாகனத் தரிப்பிடம் என சர்வதேச அளவில் ஹரமைனின் ஒவ்வொரு நிலையங்களும் அமையும்’.

saudi

‘இத்திட்டம் அல்-சொஹ்லா எனும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் 12 ஸ்பெய்ன் நாட்டின் நிறுவனங்களும், இரு சவுதி நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன. பாரிய தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்புக் கருவிகளை இணைத்து இத்திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது’.

‘மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் பாதுகாப்பாக, அதி நவீன வசதிகளுடன் மக்கா-மதீனா நகருக்கிடையில் செல்லும் ஹரமைன் ரயில் சேவை, வருடத்தில் 3 மில்லியன் மக்களை ஏற்றிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது’. என ஹாலித் அல் சுவைகட் தெரிவித்தார்.

இத்திட்டம் கடந்த 2009 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment