ஜித்தா: தற்பொழுது நிலவும் கோடைகால வெப்பத்தை முன்னிட்டு சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் போத்தல்களும், ‘டிஸ்யூ’ பெட்டிகளும் (Tissue Box) வழங்கப்படுகின்றன.
ஜித்தா நகரில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான எரிபொருள் நிலையங்களில் இத்தகைய சலுகைகளை எரிபொருள் நிலையங்கள் வழங்கி வருகின்றன. இதன் காரணமாக அதிகமான வாடிக்கையாளர்கள் தங்களது நிலையங்களுக்கு வருவதாக, அங்குள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
தற்பொழுது கோடைகால விடுமுறையை முன்னிட்டு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக ஜித்தா நகரில் சன நெரிசல்கள் ஏற்படுகின்றன. வரும் ரமழானை முன்னிட்டும் ஜித்தா நகரம் விழாக் கோலம் போடும்.
இது ஒரு நல்ல சேவை எனவும், இவை மக்களுக்கு அத்தியவசியமான பொருட்களாகவும் அமைகின்றன என பல வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Published by


Leave a comment