Category: Your Kattankudy
-
இது முஸ்லிம்கள் போராட வேண்டிய நேரம்…!
– அஜ்மான் அகமட் கொழும்பு: ஹலால் எப்போது எமது நாட்டில் விட்டுக் கொடுக்கப்பட்டதோ, அன்றுடன் முஸ்லிம்களின் உரிமைகள், மானம், மரியாதை எல்லாம் பேரினவாதத்துக்கு விட்டுக்கொடுக்கப்பட்டு விட்டது.
-
எரிகிறது…தர்ஹா நகர்!
தர்ஹா நகர்: தர்ஹா நகரில் இளைஞர்கள் பள்ளிவாயில் கூடியிருந்தவேளையில், ஊரடங்குச் சட்டம் அங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பேரினவாதக் குழுவினர், முஸ்லிம்களின் வீடுகளைத் தீக்கிறையாக்கி வருகின்றனர்.
-
பேருவளை- எலந்தகொடவில் முஸ்லிம் ஹோட்டல் சற்று முன் தாக்கப்பட்டது!
பேருவளை: பேருவளை நகரும் பேரினவாதக் காடையர் கும்பலினால் சற்று முன்னர் தாக்கப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பேருவளை, எலந்தகொடவில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலும் சற்று முன்னர் தாக்குதலுக்குள்ளானது.
-
எரிகிறது அளுத்கம
அளுத்கம: அளுத்கமையில் ஊரங்கு பிரப்பித்திருந்தபோதிலும், அங்குள்ள பள்ளிவாயல்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளும் தீ மூட்டப்பட்டு எரிவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பொலிஸ் ஊரடங்கில் அளுத்கம
அளுத்கம: இலங்கையின் களுத்துறை மாவட்டம் அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும், அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதலை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
சவுதியில் இன்றிலிருந்து மதிய நேர வேலை தடை: தொழிலமைச்சு
– MJ றியாத்: நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதி வரைக்குமுள்ள காலப்பகுதியில் நண்பகல் 12 மணியிலிருந்து பகல் 3 மணிவரைக்கும் வெளியில் வேலை செய்வது தடை செய்யப்பட்டிருப்பதாக சவுதி அரேபியாவின் தொழிலமைச்சு அறிவித்துள்ளது.
-
நாட்கள் நூறு: மலேசிய விமானம் மாயமாகவில்லை!
– S-90 வெலிங்டன்: 239 பேருடன் சீனா புறப்பட்ட மலேசிய விமானம் மாயமானது விபத்து அல்ல அது வேண்டும் என்றே செய்யப்பட்டது என்று இன்னும் வெளிவராத புத்தகத்தின் ஆசிரியர்கள் இருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 மாயமானது.
-
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக அமீன் மீண்டும் தெரிவு
– FM.பர்ஹான் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.
-
இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் உள்ள அமைப்புக்கள் காத்திரமான வரைவுக்குள் ஒன்று திரள வேண்டும்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இலங்கையின் அரசியல் யாப்பில் இலங்கை பிரஜையொன்றுக்கு வாழும் உரிமை தொடர்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்களும், விளக்கங்களும் இன்று அமுல்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியானதே, மத உரிமை.மொழி உரிமை உள்ளிட்ட இன்னும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் காணப்படுகின்றன.
-
சங்கக்காரவைத் தொடர்ந்து அன்ஜலோ மெத்யூஸூம் லோர்ட்ஸில் சதம் பெற்றார்!
– MJ லண்டன்: இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கிடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தனது டெஸ்ட் சதத்தை கிரிக்கட் பிறந்த மைதானத்தில் பெற்றுள்ளார்.
-
‘காத்தான்குடியை எப்படியும் பந்திக்கு இழுக்கவேண்டும் என்கின்ற ஊடகங்களுக்கு மெல்லக் கிடைத்த அவல்’
– MJ கொழும்பு: இலங்கையில் தலிபான் தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக இலங்கை புலனாய்வுத்துறைக்கு சர்வதேச காவல்துறையான இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது. தலிபான் தீவிரவாதிகள் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக இண்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பக்தாத்தை நெருங்கும் போராளகளை தகர்க்க அமெரிக்காவின் போர்க்கப்பல் விரைகிறது
– AF-60 பக்தாத்: ஈராக்கில் முன்னேறி வரும் சதாம் ஹூசைன் ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக விமானந் தாங்கி போர்க் கப்பலை பெர்சிய வளைகுடாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கில் சதாம் ஆதரவு படையினர் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மொசூல், திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் பாக்தாத்தையும் நெருங்கிவிட்டனர்.