உலகச் சம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி!

rvp-getty_2941594a[1]– MJ

ரியோ: உலகக் கிண்ணத் தொடரின் பி பிரிவுக்கான முதலாவது போட்டி நேற்றிரவு பிரேசிலின் எரினா ஃபொண்டி நோவா மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் உலகச் சம்பியனும், ஐரோப்பாவின் சம்பியனுமான ஸ்பெய்ன், நெதர்லாந்திடம் 5:1 கோல் கணக்கில் படுதோல்வியடைந்தது.

கடந்த 2010 தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் விளையாடியிருந்தன. கடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெய்னிடம் தோற்ற நெதர்லாந்து, நேற்றிரவு தனது பழியை தீர்த்துக் கொண்டது.

பெனால்டி உதையின் மூலமே ஸ்பெய்ன் தனது கோலைப் போட்டிருந்தது.

நெதர்லாந்து சார்பாக வெண் பேர்ஸி இரு கோல்களையும், ரூபன் இரு கோல்களையும், டி விரிஜ் ஒரு கோலையும் போட்டு நெதர்லாந்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

rvp-getty_2941594a[1]

spain-holland-casillas_3157579[1]

rvp_2941605b[1]

Published by

Leave a comment