கிண்ணியா: கிரீன் வீச் சர்வதேச பாடசாலையின் முதலாவது வருடத் தேர்ச்சியும் பொருட்காட்சியும் இன்று 14.06.2014 கிரீன் வீச் பாடசாலையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் கலந்து கொண்டார்.
இதன்போது பாடசாலை மாணவ மாணவிகள் பொருட்காட்சிக்கான தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். அதற்கான சகல வசதிகளையும் ஆசிரியைகள் வழங்கியிருந்தனர். இங்கு உரையாற்றிய நகரபிதா ஹில்மி மஹ்ரூப் இவ்வாரான சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையானது மாணவரகளின் திறமைகளை வெளிக்காட்டக்கூடியதாக அமைகின்றது.
இங்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகமானது போற்றுதற்குரியதே அத்தோடு இந்தக் கல்வியானது இபாதத்துடன் கூடிய கல்வியாக அமைய வேண்டும் என்பதுதான் முக்கியமானதாகும்.
Published by




Leave a comment