லாகோஸ்: நைஜீரியாவில் போக்கோ ஹரம் போராளிகளால் கடத்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் சிலர் பிள்ளைகளை பறி கொடுத்த அதிர்ச்சியில் மாரடைப்பு, ரத்த அழுத்தம், கோமா உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய செய்திகள் தெரிவிக்கின்றன.
போர்னோ மாவட்டத்தில் உள்ள மைடுகுரி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிபோக் பகுதியில் பெண்கள் உறைவிட பாடசாலையில விடுதிக்குள் தூங்கிக் கொண்டிருந்த சுமார் 200 இளம் வயது மாணவிகளை நைஜீரிய போக்கோஹரம் போராளிகள் சில மாதங்களுக்கு முன்பு பலவந்தமாக வாகனங்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் போராளிகளின் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மரணத்தைத் தழுவியிருக்கின்றனர்.
குறிப்பாக கடத்தப்பட்ட இரண்டு பெண்களுக்கு தந்தையானவர் ஒரு வகையான கோமாவில் சிக்கி மாணவிகளின் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின் அவரும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அறிந்த நைஜீரிய ஜனாதிபதி, மாணவிகளின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் யாரும் தவறான முடிவெடுக்க வேண்டாம் என்றும் வேண்டுதல் விடுத்துள்ளார்.
இதற்கிடையில் இம்மாணவிகளின் கடத்தல் பின்னணியில் அமெரிக்கா பின்புலமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
Published by

Leave a comment