உணவு விசமானதால் இம்முறை புலமை பரிசல் பரீட்சைக்குத் தோற்றும் 8 மாணவர்கள் வைத்தியசாலையில்

20140723_153819– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கடிச்சோலை பிரதேசத்தில் உணவு விசமானதால் இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் 8 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று 23-07-2014 புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் ரி.தவனேசனிடம் கேட்டபோது இது உணவு நஞ்சானதால் ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து வருகின்றோம். என தெரிவித்தார்.

மாணவர்களிடம் கேட்டபோது வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே உட்கொண்டோம். ஆனால் நாங்கள் தண்ணீரை குடித்தததன் பின்னரே மயக்கமும் வாந்தியும் வந்ததாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணைகளை கொக்கடிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

20140723_153819

20140723_153830

20140723_153919

Published by

Leave a comment