KCDAயின் ஏற்பாட்டில் இப்தாா் நிகழ்வு

kdca– KCDA

கல்குடா: மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமியாவின் அனுசரனையில் இப்தார் நிகழ்வு 2014.07.23ஆந்திகதி புதன்கிழமை மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் KCDAயின் தலைவர் ஜனாப். A.M. அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ்இப்தார் நிகழ்வில் பிரமுகர்களாக ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப். அல்-ஹாஜ் I.L. மஹ்றூப், முன்னாள் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப். அல்ஹாஜ். M. சுபைர், ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் கௌரவ. L.T.M. புர்க்கான், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் கௌரவ. S.A. அன்வர், மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாப். M.B. முபாரக், அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். I.M. றிஸ்வின், பாடசாலைகளின் ஆசிரியர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், பள்ளிவாயல்களின் நிருவாகிகள், கிராம அபிவிருத்தி சங்க நிருவாகிகள் மற்றும் KCDAயின் ஆலோசகர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

kdca

kalkudahkalkudah (2)

Published by

Leave a comment