ஜெனீவா: காஸா போராளிகளை தாக்குகின்றோம் என்ற பின்னணியில் காஸாவில் அப்பாவி பொதுமக்களை கொலைசெய்துவரும் இஸ்ரேலுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் 3 வாரங்களாகத் தொடரும் காஸா மீதான தாக்குதல்களில் உலக யுத்தத்திற்கான விதிமுறைகளை இஸ்ரேல் தொடர்ந்தும் மீறி வருகின்றனது. இதன்காரணமாக காஸாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் சிறுவர்களும், பொதுமக்களுமே எனவும் நவி பிள்ளை மேலும் தெரிவித்தார்.
காஸாவில் கொல்லப்பட்டவர்களுள் 74 வீதமானவர்கள் சிவிலியன்கள் என்பதை ஐ.நா ஒப்புக்கொண்டிருக்கிறது.
ஹமாஸ் போராளிகளும் தங்களது தாக்குதல்களை பொதுமக்கள் மீது மேற்கொள்வதை நிறுத்தவேண்டும் எனவும் நவி பிள்ளை கேட்டிருந்தார்.
இன்று ஜெனீவாவில் இடம்பெற்ற இஸ்ரேல்-காஸா நிலவரத்திற்கான விவாதத்திலேயே நவிபிள்ளை மேற்கண்டவாறு இஸ்ரேலை எச்சரித்து உரையாற்றிருந்தார்.
Published by

Leave a comment