அல்ஜீரிய விமானம் மாயம்

plane– SHM

அல்ஜியர்ஸ்: அல்ஜீரிய நாட்டின் விமான நிறுவனமான ஏர் அல்ஜிரி AH 5017 நடுவானில் திடீரென மாயமானதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா ஃபோசாவின் தலைநகர் அவாகடோகு நகரில் இருந்து ஏர் அல்ஜிரி விமானம் ஒன்று அல்ஜீரிய நாட்டின் அல்ஜியர்ஸ் நகருக்கு புறப்பட்டது.

விமானம்  புறப்பட்ட 50வது நிமிடத்திற்கு பிறகு அல்ஜீரியாவின் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. விமானத்தில் 116 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர்.

இதனால் விமானத்தை தேடும் பணியில் அல்ஜீரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த வாரம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு அதே ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. இதுவரை அதை கண்டு புடிக்க முடியவில்லை. இந்நிலையில் அல்ஜீரிய விமானம் திடீரென மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

plane

Published by

Leave a comment