காஸா நிலவரம்: சவுதி-கட்டார் மன்னர்கள் விசேட சந்திப்பு!

saudi qatar– MJ

ஜித்தா: சவுதி அரேபியாவின் மன்னரும், இரு புனித ஆலயங்களின் காவலனுமான அப்துல்லாஹ், கட்டார் அமிர் ஷெய்ஹ் தமிம் பின் ஹமாட் அல் தானியை ஜித்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

கடந்த 3 வாரங்களாக காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் மிருகத்தனமான தாக்குதல்களில் 630 மக்கள் ஷஹீதான பின்னர் இவ்வேசட சந்திப்பு இரு நாட்டு தலைவர்களுக்குமிடையில் இடம்பெற்றது.

இரு நாடுகளும் இணைந்து பாதிக்கப்பட்ட காஸாவுக்கு புணர்நிர்மான வேலைகளை மேற்கொள்வதும், அங்குள்ள மக்களுக்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் இவர்களின் பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் இவர்களது சந்திப்பு இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டிப்பதாவோ, பலஸ்தீனுக்குக் குரல் கொடுப்பதாகவோ அமையவில்லை என்பது காஸா மக்களுக்கு ஏமாற்றமே!

saudi qatar

Published by

Leave a comment