இஸ்ரேலின் யுத்தநிறுத்த கோரிக்கையை நிராகரித்தது ஹமாஸ்!

Khaled Meshaal[1]– MJ

காஸா: இஸ்ரேலின் தற்காலிக யுத்தநிறுத்த கோரிக்கையை ஹமாஸ் நேற்றிரவு நிராகரித்திருந்தது. இந்த நிராகரிப்பை ஹமாஸ் தலைவர் ஹாலித் மெஸால் உத்தியோகபூர்வமாக தெரிவித்தார். 16 நாட்களாக இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதலின் பின்னர் இஸ்ரேலால் விடுக்கப்படும் இரண்டாவது யுத்தநிறுத்தக் கோரிக்கை இதுவாகும்.

‘பலஸ்தீனத்தின் ரஃபா பிரதேசத்திலிருந்து எகிப்திற்கு செல்வதற்கான பாதையை இஸ்ரேல் கடந்த எட்டுவருடங்களாக மூடியிருக்கினறது. இந்தப்பாதையை இஸ்ரேல் திறக்காதவரை தாங்கள் இஸ்ரேலின் யுத்தநிறுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை’ என திடகாத்திரமாக ஹாலித் மெஸால் ஊடகங்களுக்குத் தெரித்தார்.

‘யார் வேண்டுமானாலும் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அல்லது யுத்தநிறுத்த கோரிக்கைக்கு முன்வரலாம். தாங்கள் அதனை இன்முகத்தோடு வரவேற்கின்றோம். ஆனால் எகிப்து சார்பாக எவரும் இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க வரக்கூடாது. அவர்கள் எங்களுடன் பேசுவதற்கு அறுகதையற்றவர்கள்’ எனவும் எகிப்தை ஹாலித் மெஸால் சாடியுள்ளார்.

Khaled Meshaal[1]
ஹமாஸ் தலைவர் ஹாலித் மெஸால்

‘கடந்த 3 வாரங்களாக இஸ்ரேலால் அழிக்கப்பட்டுவரும் காஸமக்கள் இப்பிரதேசத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். இதன்காரணமாக குழந்தைகள், சிறுவரகள் மற்றும் பெண்கள் இஸ்ரேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்’.

‘இந்நிலையில், தாங்கள் யுத்தநிறுத்தத்துக்கு முன்வந்தால் எங்கள் மக்கள் செய்த தியாகங்களுக்கு துரோகமிழைத்தவர்களாக நாங்கள் உள்ளாவோம்’.

‘தாங்கள் போராடவோ, மக்களைக் கொல்லவோ ஒருபோதும் விரும்பவில்லை. யுத்தத்தை தொடரவும் விரும்பவில்லை. ஆனால் யுத்தமென்று வந்தால் யாருக்கும் தாங்கள் தலைசாய்க்கமாட்டோம் இது எங்களது உறுதியான தீர்மானம்’.

‘எனவே, யுத்தநிறுத்த கோரிக்கையை நாங்கள் ஏற்பதானால், ரஃபா-எகிப்து எல்லை திறக்கப்பட வேண்டும். இஸ்ரேலும் எகிப்தும் எல்லையை திறக்க சம்மதித்தால் இந்த நிமிடமே தாங்கள் சமாதான உடன்படிக்கைக்குத் தயார்’ எனவும் ஹமாஸ் தலைவர் ஹாலித் மெஸால் தெரிவித்தார்.

RT_ISRAEL-BLOCKADE-C[1]

இஸ்ரேலுக்கு தற்பொழுது உலக நாடுகளிடமிருந்து அழுத்தங்களுக்கு மேல் அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. தங்களது வீர்களை இவ்வளவு எண்ணிக்கையில் பலிகொடுப்போம் என இஸ்ரேல் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

அதுமாத்திரமன்றி, இஸ்ரேலுக்கான விமான சேவைகளும் உலக நாடுகளால் இடைநிறுத்தப்பட்டு வருகின்றன. ஐ.நா அழுத்தம், தொண்டர் நிறுவனங்களின் அழுத்தம், சிறுவர் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களின் அழுத்தங்களும் கேள்விகளாலும் இஸ்ரேல் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியால், இந்த தற்காலிக யுத்தநிறுத்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.

தற்பொழுது, எகிப்து-ரஃபா எல்லையைத் திறப்பதற்காக சில மறைமுக பேச்சுவார்த்தைகளை உலகநாடுகளின் உதவியுடன் இஸ்ரேல் முன்னெடுத்து வருவதாக தெரியவருகிறது.

கடந்த 3 வாரங்களாக இடம்பெற்ற இஸ்ரேல்-காஸா தாக்குதல்களில் 695 காஸா மக்களும், 34 இஸ்ரேலியர்களும், ஒரு தாய்லாந்து பனியாளரும் கொல்லப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment