இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டு- மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட 4000 வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம்

mnkjkபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரனையுடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4000 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த வீடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டம் 19-08-2014 நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக் உட்பட அரச திணைக்களங்களின் தலைவர்கள், இந்தியன் வீட்டுத்திட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

unnamed,

இவ் விஷேட கூட்டத்தில் குறிப்பாக இந்த 4000 வீடுகளிலே சுமார் 2500 வீடுகள் இதுவரையில் கட்டப்பட்டு அது நடைமுறையிலே முடியும் தறுவாயில் இருப்பதாகவும் ஏனைய வீடுகளிலே இருக்கின்ற சில பிரச்சினைகள்,அந்த கிராமங்களிலே இருக்கின்ற பிரச்சினைகள் ,பயனாளிகளை தெரிவு செய்ததில் இருக்கின்ற பிரச்சினைகள்,அந்த வீட்டு திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டிய விடயம் தொடர்பில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு மிக விரைவாக இந்ந வீட்டு திட்டங்களை முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட அரச அதிபர் ஆகியோரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு இது தொடர்பில் இருக்கின்ற சில பிரச்சினைகள் தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் தூதுவராலயத்தோடு தொடர்பு கொண்டு தீர்த்து வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

unnamed

mnkjk

Published by

Leave a comment