ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் புதிய பாதைக்கான மின் இணைப்பு

bazeer– FM.பர்ஹான்

ஒல்லிக்குளம்: அமைச்சர் அல்ஹாஜ் பஷீர் சேகுதாவூத் அவர்களின் முன்னெடுப்பு நடவடிக்கையின் பயனாக மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள ஒல்லிக்குளம் கிச்சான் பள்ளம் ஆகிய கிராமங்களை இணைக்கும் புதிய பாதைக்கான மின்விநியோக இணைப்பை இலங்கை மின்சார சபை 18.08.2014 அன்று வழங்கியது.

இவ்வேலைத்திட்டத்தின் பயனாக சுமார் 25 குடும்பங்களும் மீள்குடியேறவுள்ள குடும்பங்களும் பயனடையயவுள்ளனர். இந்நடவடிக்கைக்காக கௌரவ அமைச்சர் அவர்களுக்கும் பிராந்திய மின்அத்தியட்சகர் அவர்களுக்கும் மின்சார சபை ஊழியர்களுக்கும் அப்பிரதேச மக்கள் தங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Published by

Leave a comment