Category: Your Kattankudy
-
கத்தார் ஸனாஇய்யாவில் ‘இஸ்லாமிய வாலிபனே’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு
டோஹா: கத்தார் ஸனாஇய்யாவில் -‘இஸ்லாமிய வாலிபனே என்ற தலைப்பில் இன்று 18 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஈமானிய அமர்வு பனார் இஸ்லாமிய கலாச்சார் நிலையம் ஸனாஇய்யா கிளையில் இடம்பெறும் இதனை அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி ) நிகழ்த்துவார்.
-
மட்டு-குருக்கள்மடம் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை நவம்பர் 24 திகதிக்கு ஒத்திவைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் களுவாஞ்சிக்குடி: களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலை புலிகளால் கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் (ஜனாசாக்கள்) புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
‘சுனாமி பேபி 81’ அபிலாஷ் நேற்று பரீட்சைக்குத் தோற்றினார்
மட்டக்களப்பு: ‘சுனாமி பேபி 81’ என்று பத்து வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அபிலாஷ் மட்டக்களப்பு செட்டிப் பாளையத்தில் உள்ள பாடசாலையில் தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளான்.
-
மொசூல் அணைக்கட்டை ஈராக் படையினர் மீண்டும் கைப்பற்றினர்!
– MJ மொசூல்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணைக்கட்டான மொசூல் அணைக்கட்டை, இஸிஸ் அமைப்பினர் கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில், தற்பொழுது அமெரிக்காவின் பின்னணியில் ஈராக் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
-
2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சகாரா நிறுவன ஹோட்டல்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!!
– SHM நியூயோர்க்: முதலீட்டாளர்களின் ரூ. 20 ஆயிரம் கோடியை ஏமாற்றியதற்காக சிறையில் இருக்கும் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் சொத்துக்களை வாங்க புருனே சுல்தான் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
-
10 ரூபா நாணயத் தாள் இனிமேல் இல்லை
கொழும்பு: இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது.
-
கருமலையூற்று பள்ளிவாசல்….
திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் பாதுகாப்பு தரப்பினரால் நேற்று உடைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. கட்சி உறுப்பினர் மொகமட் மஹ்ருப் இம்ரான் இது தொடர்பான குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளார்.
-
கரிமலையூற்று பழைமை வாய்ந்த பள்ளிவாயல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது
PMGG ஊடகப்பிரிவு திருகோணமலை: 1880களுக்கு முன்னர் நிர்மணிக்கப்பட்ட திருகோணமலை, வெள்ளைமணல், கரிமலையூற்று ஜும்ஆ பள்ளிவாயல் இன்று காலை இராணுவத்தினரால் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. (மாபிள் பீச் பகுதியில் குறித்த பள்ளிவாயல் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது)
-
‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ கவிஞர் மதியன்பனின் கவிதை நூல் வெளியீடு
அஸ்ஸஹ்றா காத்தான்குடி: காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29.08.2014 அன்று காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் நடைறெவிருக்கிறது.
-
திவிநெகும வேலைத்திட்டம் ஊடாக ஜனாதிபதி அவர்களின் கரத்தினை மேலும் பலப்படுத்த முடியும் – ஜகத் குமார
எம்.எச்.எம்.அன்வர் கொழும்பு: தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமூட்டுவதன் ஊடாக மகிந்த ராஐபக்ஸ அவர்களின் கரத்தினை மேலும் பலப்படுத்த முடியும். இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான திரு ஐ டி ஜகத் குமார தெரிவித்தார்.
-
‘எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் வெள்ளைக்காரரே’ – ஜனாதிபதி
நுவரெலியா: ‘எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக்காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
அமெரிக்க ஜெட் தாக்குதலில் 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டனர்!
– MJ மொசூல்: ஈராக்கின் இஸ்லாமிய கலீபஃத் மாநிலத்தின் பிரதான நகராக இருக்கும் மொசூல் நகரின், அணைக்கட்டிற்கு அருகாமையில் நிலைகொண்டிருந்த இஸிஸ் போராளிகளை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஜெட் தாக்குதலில் குறைந்தது 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.