அல் மனார் நிறுவனத்தின் ரமழான் விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா

unnamed   mஎம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற விஷேட அறிவியியல் போட்டி நிகழ்ச்சிக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 24-08-2014 அன்று பி.ப.4.00 மணிக்கு அல் மனார் வளாக அர்ராஷித் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஏ எல் எம் மும்தாஸ் மதனி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.
மௌலவி எம்.எம்.மன்சூர் (பலாஹி) மற்றும் எஸ்.எம்.பீ எம் அன்ஸார் மதனி ஆகிய உலமாக்களின் வழிகாட்டலின் கீழ் ரமழான் மாதத்தில் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த அறிவியியல் போட்டி நிகழ்ச்சியானது மிகுந்த வரவேற்பினைப்பெற்றதாக இருந்ததாதகவும் காத்தான்குடி எல்லைப்பிரதேசத்தில் மாத்திரம் இடம்பெற தீர்மானிக்கப்பட்ட இந்நிகழ்வு அகில இலங்கை பூராவும் வியாபித்திருந்ததாகவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சுமார் 1875 விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன அதில் 928 விண்ணப்பங்கள் உரிய காலப்பகுதிக்குள் கிடைக்கப்பெற்றிருந்தன இதில் ஒருவரேனும் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவில்லை இருந்தும் கூடுதலான புள்ளிகளைப்பெற்ற அதாவது 58 புள்ளிகளை காத்தான்குடி 01 வி எச் லேனில் வசிக்கும் எம்.ஐ அப்துள்ளா என்பவர் பெற்றுள்ளார். அவருக்கு எமது அல்மனார் நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஏலவே கூறப்பட்ட பிரகாரம் அன்றய விழாவின்போது முதல் பரிசாக ரூ.40000.00 பெறுமதியான ஷோபா செட்டும் 2ம் பரிசாக 20000.00 பெறுமதியான பரிசும் 3ம் பரிசாக 12000.00 பெறுமதியான பரிசும் 10 பேருக்கு தலா 3000.00 பெறுமதியான ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை நெறிக்கான பொறுப்பாளர் எம்.டி எம் றிஸ்வி (மஸூதி) யும் கௌரவ அதிதியாக இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய உப தலைவர் எம்.ஏ ஹாலித் ஹாபிஸ் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி உலமாக்களால் செயலாளர் மும்தாஸ் மதனி மற்றும் நிறுவன பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நௌசாத் ஆகியோரிடம் போட்டி முடிவுகள் உத்தியோகபூர்வமாக இதன்போது கையளிக்கப்பட்டன.

Published by

Leave a comment