Category: Your Kattankudy
-
மக்கள் சேவைக்காக தம்மை அர்பணித்து ஓய்வு பெற்ற இலங்கை வங்கியின் ஊழியர்களுக்கு கௌரவம்
எம்.ரீ.எம்.பாரிஸ் ஓட்டமாவடி: இலங்கை வங்கியின் 75வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை வங்கியில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் ஊழியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வங்கி ஓட்டமாவடி கிளையின் முகாமையாளர் பிரான்சிஸ் திருச்செல்வம் தலைமையில் (19.08.2014) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கி கட்டிடத்தில் நடைபெற்றது.
-
வான்தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்! ஹமாஸின் ரொக்கட் இஸ்ரேலுக்குள் வீழ்ந்து வெடித்தது!!
– MJ டெல் அவிவ்: திங்கட்கிழமை கெய்ரோவில் இடம்பெற்ற இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் தரப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 6 நாட்களின் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை மாலை இஸ்ரேல் காஸாவை நோக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
-
இடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு செல்கிறது
திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தால் இடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்இ அங்கு பல்கட்சி உறுப்பினர்கள் சென்று பார்வையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-
‘திருமணம் செய்யப் போகும் பெண் குளிப்பதை ஒளிந்து நின்று பார்க்கலாம்’ எகிப்தில் சலபி ஒருவரின் ஃபத்வா! சர்ச்சையில் மக்கள்!!
– SHM கெய்ரோ: எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு மதத் தலைவர் அறிவித்துள்ள வித்தியாசமான ஃபத்வா அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒருவருக்கு வருங்காலத்தில் மனைவியாகப் போகும் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது அதை மறைந்து நின்று ரசித்துப் பார்ப்பது தவறில்லை என்று இந்த ஃபத்வா அதாவது மத நெறிமுறை கூறுகிறது.
-
கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சி
கொழும்பு: ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து கா.பொ.த.உயர் தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சியினை இவ்வருடமும் நடாத்தவுள்ளது.இது தொடர்பான விவரங்கள் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் பரீட்சாத்திகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
கொழும்பு: உயர்தரப் பரீட்சார்த்திகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு மனித உரிமை ஆணைக்குழுவிடம் சில பௌத்த பிக்குகள் முறைப்பாடு செய்துள்ளனர். உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சைக்குத் தோற்றுவதனால் ஏனைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பௌத்த பிக்குவான தேவகிரியே சந்திசேவர தேரர் தெரிவித்துள்ளார்.
-
குருக்கள்மடம்: தோண்டப்படும் ஜனாஸாக்கள்.. இஸ்லாத்தில் ஆகுமாக்கப்பட்டதா?
– அபூஸைனப் காத்தான்குடி: கடந்த 1990ம் ஆண்டு மட்டு-கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் குருக்கள்மடம் எனும் தமிழ் கிராமத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களின் ஜனாஸாக்களை தோண்டி எடுக்கும் முயற்சிகள் சுமார் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றன.
-
2020இல் தனிநபர் வருமானம் 7500 அமெரிக்க டொலர்!!
கொழும்பு: பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இவ்வருடம் நிறைவுறும் இவ்வேளையில் 7.8 வீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ள இலங்கை, 2020 ஆம் ஆண்டாகும் போது தனிநபர் வருமானமாக 7500 அமெரிக்க டொலர்களையும்.
-
எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் மஹேலவுக்கு தங்கத்துடுப்பு வழங்கி ஜனாதிபதி கெளரவம்
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தமது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அவருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
-
இஸ்ரேல்-பலஸ்தீன் தரப்புக்கிடையில் சமாதானப் பேச்சுவார்த்தை எட்டாக்கணி: இஸ்ரேலின் தாக்குதல் தொடரலாம்!
– MJ கெய்ரோ: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கிடையில் கடந்த 5 நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த போர்நிறுத்தம் உள்ளுர் நேரப்படி இன்றிரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. இன்று திங்கட்கிழமை எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல்-பலஸ்தீன் இருதரப்புக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை என கெய்ரோவின் செய்திகள் தெரிவிக்கின்றன.
-
‘கருமலையூற்று பள்ளிவாசல் மழையினாலேயே இடிந்து விழுந்துள்ளது’
திருகோணமலை: இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது.
-
முஸ்லிம் இளைஞரை மணந்த யூதப்பெண்! இஸ்ரேலில் பரபரப்பு!
– SHM டெல் அவிவ்: இஸ்ரேலில் போர்பதற்றமான சூழ்நிலையில் யூதப்பெண் ஒருவர் முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இஸ்ரேலில் பரபரப்பு ஏற்பட்டது.