றியாத்: சவூதி அரேபியாவில் இந்த மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன.அஒருவர் பில்லி சூன்யம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சிரச்சேதம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து 19 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு கூறுகிறது.
போதைப் பொருட்கள் கடத்தியது போன்ற வன்செயல் அல்லாத குற்றங்களுக்காக எட்டு பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர் என்று இந்த அமைப்பு கூறுகிறது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் நால்வர் சவூதி அரேபியாவுக்குள் ஹஷிஷ் என்ற போதைப் பொருளை கடத்தி வர முயன்றதாகக் குற்றம் காணப்பட்டவர்கள் என்று தெரிகிறது.
Published by

Leave a comment