அயர்ன் டோமைத்தாண்டி இஸ்ரேல் நகரங்களில் விழும் ஹமாஸின் ரொக்கட்டுக்கள்

israel– MJ

ஜெரூஸலம்: இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் முகமாக ஹமாஸ் இராணுவத்தினால் ஏவப்படும் ரொக்கட்டுக்கள் இஸ்ரேலின் நகரங்களுக்குள் வெடித்துச் சிதறுகின்றன. பலம் பொருந்திய ஏவுகணை எதிர்ப்பு கோபுரமான அயர்ன் டோமின் சமிக்கைகளில் படாமல் இத்தகைய ரொக்கட்டுக்கள் இஸ்ரேலுக்குள் சென்று வெடிக்கின்றன.

இன்று அதிகாலை 12:30 மணியளவில் காஸாவிலிருந்து ஏவப்பட்ட 5 ரொக்கட்டுக்கள இஸ்ரேலின் எஸ்கோல் பிரதேசத்தில் வீழ்ந்து வெடித்ததாகவும், அவற்றுள் ஒன்று, வீடு ஒன்றின்மேல் வீழ்ந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஏவுகணை அபாய சமிக்கையின் காரணமாக எவருக்கும் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.

israel
இஸ்ரேலின் எஸ்கோல் பிரதேசத்தில் ஹமாஸின் ரொக்கட் தாக்குதலுக்குள்ளான வீடு

Published by

Leave a comment