ஐஸ் குளியலுக்கு சம்மதித்துள்ள பிரபலங்கள்

ronaldoநியூயோர்க்: ஏ.எல்.எஸ். நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நிதி திரட்டவும் ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சவாலை உலக பிரபலங்களில் பலர் ஏற்று தங்கள் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர். மேலும் இந்த சவாலை ஏற்கும் ஒவ்வொருவரும் 3 பேரை கைகாட்டி அவர்களை இந்த சவாலை ஏற்குமாறு கூற வேண்டும்.

அப்படி ஐஸ் பக்கெட் சவாலை ஏற்ற பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று அதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று ஒரு பக்கெட் நீரை தன் தலையில் ஊற்றிக் கொண்டார்.

saniya

பங்குச்சந்தை முதலீட்டாளர், புத்தக எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என்று பன்முகம் கொண்ட வாரன் பஃப்பெட்டும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா ஆகியோரும் இந்த சவாலை ஏற்றுள்ளனர்.

பிரபல போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளார்.

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஓப்ரா வின்ப்ரே, பிரபல பாப் பாடகி லேடி காகா, பாடகர் ஜஸ்டின் பீபர் ஆகியோரும் சவாலை ஏற்றுள்ளனர்.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், ஹொலிவுட் நடிகர்கள் ரொபர்ட் டவ்னி ஜுனியர், ஜஸ்டின் டிம்பர்லேக், சார்லி ஷீன், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், பிரபலங்கள் டெய்லர் ஸ்விப்ட், லில் வேய்ன், இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னா ஆகியோரும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுள்ளனர்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை சாரும். அவரு இந்த சவாலை இரண்டு முறை ஏற்றுள்ளார்.

பொலிவுட் நடிகைகள் பிபாஷா பாசுஇ லாரா தத்தாஇ மந்திரா பேடிஇ நடிகர்கள் அக்ஷய் குமார்இ அபிஷேக் பச்சன்இ ரித்தேஷ் தேஷ்முக்இ சித்தார்த் மல்ஹோத்ராஇ ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராஇ ஹன்சிகா ஆகியோரும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று தங்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றியுள்ளனர்.

நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்குமாறு யாரும் கூறிவில்லை. அவராகவே அந்த சவாலை ஏற்றார். ஆனால் வெறும் பக்கெட்டை தன் மீது கவிழ்த்து நீரை மிச்சப்படுத்திவிட்டேன், ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடை அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சவாலை அனைவரும் ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by

Leave a comment