ஆடிக் கொண்டிருக்கிறாய்
ஒரு பேயாட்டம்
மனிதம் வெட்கித்
தலைகுனியும் படி
மானம் கெட்ட
உன் செயலால்
மனிதனாயிருக்க
வெட்கப் படுகிறேன்
உயிர் பிடுங்கும்
உன் வெறியாட்டம்
நீ அதிகம்
பயந்திருக்கிராய் என்பதை
எனக்கு உணர்த்திற்று
அதிகாரப் பசியின்
கோரப் பற்களோடும்
உலக இச்சையின்
வெறியோடும்
உனக்கு துணை இருக்கிறது
அரபுக் கரங்கள்
அதற்குரிய தவணையின்
மறுதலிப்போடு
இறுகி இருக்கும்
அரபு இறுமாப்பை விட
உலகின் இதயத்தில்
எங்காவது ஓரத்தில்
எமக்காக ஈரம்
கசியக் கூடும்
எமது அமைதியும்
சமாதானமும்
மரணம்தான் என்பதை
பிணம் தின்னும்
உன்னைவிட
எம்மாதர் கருவிருக்கும்
சிசு அறியும்
எமது கைகள்
தரிக்கும் எரிகருவிகள்
சகாதத்தின் எழில்மிகு
ஸ்பரிச சுகத்தை
எமக்கு உணரச்
செய்யாமல் இல்லை
போ!!!
நீயும்
எம்பெயர் தாங்கும்
உன் தோழமைகளும்
மென் பாலகர்களின்
குருதி கறையோடும்
எம்குலப் பெண்களின்
அர்சு நிறைக்கும்
கண்ணீர் கடலோடும்
நாசமாய்ப் போவாய்
போ!!!!!!

Leave a comment